*நீர்*
பஞ்சபூதங்களில் நீ முதன்மையானாய்!!
மகேஸ்வரன் தலையில் நீ கங்கை ஆனாய்!!
பாலையை சோலையாய் மாற்றும் பக்குவம் நீ அறிவாய்!!
பே யாமல் சோலையை மாற்றவும் அறிவாய் நீ!!
உயிர் தாகம் தீர்க்க உன்னையே தந்திடுவாய்!!
நேரத்தில் பொழியாமல் நெருக்கடி தந்திடுவாய்!!
அளவுக்கு மேல் பொழிந்து அழிக்கவும் அழித்திடுவாய்!!
ஆற்றிலும் குள த்திலும் நிறைந்து அல்லல் தீர்த்திடுவாய்!!
கலசத்திலும் கும்பத்திலும் புனித நீர் ஆகிடுவாய்!!
தலையில் விட்டுக்கொண்டு குளித்தால் புத்துணர்ச்சி தந்திடுவாய்!!
நெருப்பைக் கூட குளிர வைக்கும் நெஞ்சுரம் உனக்கு உண்டு!"
இவ்வளவு சக்தி கொண்டும் இறுமாப்புக் கொள்ளாமல், உலகத்தை உய்ய வைக்கும் உயிரான நீரே,உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!!
*சிசு*
No comments:
Post a Comment