** பூமித்தாய்*
பொறுமையின் சிகரம் நீ!!
பொக்கிஷத்தின் சுரங்கம் நீ!!
ஏழு கடலுக்குள்ளே எண்ணற்ற ஜீவன்கள்!!
முத்து, மரகதமன கணக்கில்லா கனிமங்கள் கஷ்டமின்றி சுமக்கின்றாய்!!
கானகத்தை வளர்த்திட்டு கார்மேகமாய் சூழ்ந்து எங்கள் தாகம் தணிக்கின்றாய்!!
வைரம்,தங்கம்,தாமிரம் முதல் எண்ணெய் வரை தந்து எங்களை ஏற்றமடைய செய்கின்றாய்!!
ஏறு கொண்டு உழுதாலும், வெடிவைத்து பிளந்தாலும், சினம் ஏதும் கொள்ளாமல் சிரித்து மகிழ்கின்றாய்!!
என்னதான் நாங்கள் உனை இடம் மாற்றிக் கொணர்தாலும்,
என்னை விட்டு அங்கு நீங்கள் எங்கே கொண்டு சேர்ப்பீர்கள் என்று எண்ணி ஏளனமாய் சிரிக்கின்றாய்!!
தரணியில் யாம் வாழ காய்,கனியாய், இலை தழையாய்,திறவியமாய்,அத்தனை ஜீவனுக்கும் அயராது பசி தீர்க்கிறாய்!!
மாந்தரின் கொடுமைகள் மட் டி ன்றி கூடிவிட்டால், சின்ன சினம் கொண்டு எரிமலையாய் வெடிக்கின்றாய், நெருப்பினை நீ கக்குகின்றாய்!!
சோம்பல் முறிப்பது போல் உடலை நீ சிலிர்த்து விட்டால், பூமி பிளந்து பூகம்பமாய் அதிர்கின்றாய்!!
ஏன்? இந்த கோபத்தை எங்கள் மேல் கொட்டுகின்றாய்!!
எத்தனை பிழைகள், எண்ணிலா குற்றங்கள், ஏது யாம் செய்தாலும், செய்தது உன் சிசு, பொறுப்பது உன் கருணை.
மன்னித்து அருள வேண்டும் என மன்றாடி வேண்டுகின்றோம், தாயே எங்கள் பூமித்தாயே!!
உன்னை மன்றாடி வேண்டுகிறோம்!!.. சிசு!
17/02/2026.
No comments:
Post a Comment