! காற்று!*
காலம் காலமாய் கண்ணுக்குத் தெரிய மாட்டாய்!!
கா னகமும் மலையும் கஷ்டமின்றி கடந்திடுவாய்!!
நெருப்புடன் கலந்திட்டால் நிர்மூலம் ஆக்கிடுவாய்!!
ஒவ்வொரு உயிரிலும் நீ ஓயாமல் ஓடுகின்றாய்!!
ஓட்டத்தை நிறுத்தி விட்டால் உயிரற்ற தாக்கிடுவாய்!!
தண்ணீரில் இணைந்து நீ தாகம் தீர்த்திடுவாய்!!
காலையிலும் மாலையிலும் தென்றலாய் தீண்டிடுவாய்!!
வெற்றிடத்தை நோக்கி நீ வேகமாய் சென்றிடுவாய்!!
புயலோடு சேர்ந்து விட்டால் பூவுலகை அழித்திடுவாய்!!
மரம் செடி, கொடி வளர பிராணனாய் இருந்திடுவாய்!!
கடும் கோபம் கொண்டு விட்டாள் சூறாவளியாய் சுழன்றிடுவாய்!!
உன் அசைவு நின்று விட்டால் உலகமே நின்று விடும்!!
ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோருக்கும் உதவும் உனை என்ன சொல்லி போற்றுவது!!
காலம் உள்ளவரை கஷ்டமின்றி யாமிருக்க கனிந்தே உதவி விடு,
ஏ காற்றே கனிந்தே உதவி விடு!!
உனை என்றும் வாழ்த்தி வணங்குகிறோம்!!
* சிசு*
No comments:
Post a Comment