நண்பர் ஒருவர் முன்னனுப்புச் செய்தியில் "கும்பகோணம் டிகிரி" காப்பியை நினைவு படுத்தி விட்டார்.
எழுபதுகளில்,
என் கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன்
ஒரு திருமணத்திற்காக,
நவம்பர் மாத குளிர் காலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம்.
நண்பரில் ஒருவர் அப்பகுதியைச்
சேர்ந்தவராதலால் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த
ஒரு "நெஸ்கபே ஸ்டாலுக்கு'
காபி அருந்த அழைத்துச் சென்றார்.
என் வயதினருக்கு "நெஸ்கபே ஸ்டால்" பரிச்சயம் இருக்கும்.
ரிக்கார்ட் பிளேயரில் விரும்பிய
பாட்டைக் கேட்டவாறே சுடச்சுட
நெஸ்கபே காபி அருந்தும் சுகம்
அலாதி.
ஆனால் அந்தக் கடையில்
டிகிரி காப்பியும் கிடைத்தது.
"பதினாறு வயதினிலே"
படம் வந்த புதிது.
ரிக்கார்ட் பிளேயரில்
இளையராஜாவின் இசையில்
"மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு"
பாடலை இரசித்த படி
கள்ளிச் சொட்டாட்டம் குடித்த
கும்பகோணம்
டிகிரி காப்பியின் சுவை
இன்றும் என் நாவில்.
இளையராஜாவின் இசை
என் செவிகளில்.
No comments:
Post a Comment