Thursday, February 19, 2026

தமிழ்த்தாத்தா பிறந்த தினமின்று!

 சங்க இலக்கிய சுவடிகள் எல்லாம்

செல்லரித்துப் போய் இருக்கும்

தங்கத்தினும் உயர்ந்த

ஓலைகளோ

மண்ணோடு மண்ணாகிப் போய் இருக்கும்


பதிணென் மேல் கணக்கு

பயன் படாது போய் இருக்கும்

பதிணென் கீழ் கணக்கு

போகித் தீயில் எரிந்திருக்கும்


அர்ப்பணிப்பு உணர்வோடு

அங்கும் இங்கும் அலைந்தாரே

காடு மேடு கழனி எல்லாம் 

சுற்றிச் சுற்றித் திரிந்தாரே


இலக்கியப் புதையல் ஓலைகளை

தேடித் தேடி  அலைந்தாரே

அரிய பொக்கிஷ சுவடிகளை

மீட்டெடுத்துக் கொடுத்தாரே


கரையான் அரித்து ஒழிக்கா திருக்க

அச்சில் அவற்றை ஏற்றினாரே

செம்மொழியாய் உலா வரவே

நம் மொழிக்கு சேவை அவரும் செய்தாரே


தமிழன்னை சேவை புரிந்த

தமிழ்த்தாத்தா பிறந்த

தினமின்று!

போற்றி நாமும் புகழ்ந்திடுவோம்

அவரைப் புகழ்ந்து மகிழ்ந்திடுவோம்!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


===========

தலையாய சேவை செய்ய...


இலக்கியத் தமிழது அழிந்து கொண்டிருந்தது 

   இறைவனுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கியது


உலைகளில் பல ஓலைச் சுவடிகள் எரிந்தன 

   உணவாக கரையான்கள் பல நூறு அரித்தன


விலையிலா தமிழ்ப் புதையல் வீணாய்ப் போனது

   வெள்ளமும் தன்னோடு பல கொண்டு போனது


தலையாய சேவை செய்ய ஒரு குழந்தை பிறக்குது 

   "தமிழ்த் தாத்தா" எனப் பின் அறியப் பட போகிறது 💐🙏


__. குத்தனூர் சேஷுதாஸ் 19/2/2026


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...