பறவைக் காய்ச்சலாம்...
ஊரெல்லாம் இதே பேச்சு "பறவைக் காய்ச்சல்"
ஒற்றுமையாம் காகம் மேல் நோயின் பாய்ச்சல்
பூர்வாவையும் விடவில்லை இன்று நிகழ்ந்தது
பொத்தென பறந்த காகம் விழுந்து ஓய்ந்தது
ஏரியோரம் வாழ்கிறோம் எச்சரிக்கை வேணும்
" எச்சில் கையாலும் ஓட்டக் கூடாதாம் காகம் "
" காரியம் ஆவதற்கும் காக்கா பிடிக்க வேண்டாம் "
கவனமாய் இருத்தல் போதும் கவலை வேண்டாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 12/2/2026
No comments:
Post a Comment