வரூம் .....ஆனா வராது......
--------------
இது ஒரு நகைச்சுவை சொற்றடராக, திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள்.
கேட்டவுடனேயோ, பார்த்தவுடனேயோ நகைப்பை ஊட்டும் விதத்தில் காட்சி அமைந்திருக்கும்.
முதலில் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்போம்.
பின்பு, எனக்குத் தெரிந்த அளவில் இதன்தத்துவம் பற்றி பதிவிடுகிறேன்
வரூம் ஆனா வராது- நம் வாழ்வில்-
பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வரூம், ஆனாக்க , நமக்கு ஏற வராது; ஏன்னா,தள்ளியே நின்னு,எறங்க வேண்டியவங்களை,வெளியே, துப்பிட்டு, பொறப்ட்ரும்!
பரீட்சை முடிவுகள் வரூம். ஆனா நம்ம பேரு வராது!
தமிழு- தத்தி, தத்தி பேச வரூம் , ஆனா படிக்க வராது!
எல்லா நல்ல விஷயங்களும், வரூம் பக்கத்து ஊடுங்களுக்கு; ஆனா வராது நமுக்கு!
இப்படிப்பலப்பல!!
கருத்து( வட சென்னையில் கூறுவது போல!):
எது நமக்கு உரியதோ, அல்லது நமக்கு"கொடுத்து வைத்திருக்கிறதோ" அதுதான் நமக்கு வரூம்; நமக்கு உரியன அல்லாதவைக்கு ஆசைப்பட்டா வராது!
- இ.ச.மோகன்
No comments:
Post a Comment