நற்சுனை 28
திருஷ்டிப் பொட்டு!
தன் குழந்தைக்கு எதிராக தொடுக்கப்படும் கண் அஸ்திரங்களை
முறியடிக்கும் கேடயமாய்
எதிராளிகளின் மனக் கருமை ஊடுருவாமல் பிரதிபலிக்கும்
கருப்புக் கண்ணாடியாய்
தன் கண்மணியின் கன்னத்தில் "கண்"மை" வைத்தாள்..
கண் திருஷ்டி உண்மையா என
அலசி ஆராய்ந்து அறிந்து கொள்ள விரும்பாத அன்னை!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment