Saturday, October 25, 2025

சந்திப்பு

 நற்சுனை 20


சந்திப்பு


மற்றவர்களின் பயணங்களை நம் பயணம் தீண்டிய போது...

காபியின் நறுமணம் சில மனங்களை

ஆழ்த்தியபோது..

வாழ்க்கையின் நெடுங்கணங்கள் நொடிக் கணங்களில் பகிரும்போது...

ஒற்றுமைகள் ஒட்டி வைக்க..

வேற்றுமைகள் வியக்க வைக்க...

பயணங்களின் ஒவ்வொரு துளியும்

காபியின் துளிகளாய் இரசிக்க வைக்க..

சிந்திக்கத் தூண்டும் சில சந்திப்புகள்

சிரிக்க வைக்கும்  சில தித்திப்புச் சந்திப்புகள்

சிலாகிக்க வைக்கும் சில திகைப்புச்

சந்திப்புகள்

அழுவதற்கு தோள் கொடுக்கும் சில ஆறுதல் சந்திப்புகள் 

காயம்பட்ட மனதிற்கு மயிலிறகாய்   சில சந்திப்புகள்

உண்மைகளை உணர வைக்கும் சில சந்திப்புகள்

உறவையும் நட்பையும் பேணும் சில சந்திப்புகள்

நட்பை உறவாக்கும் சல சந்திப்புகள்

பகையும் புகையும் சில சந்திப்புகள்

வேண்டாவெறுப்பாய் சில சந்திப்புகள்

இரும்பு  மனக்கதவுகளைத் திறந்திடும் சில சந்திப்புகள்  

தவிர்க்க எண்ணும் சில சந்திப்புகள்




சந்திப்புகள் பல..

எனினும்..

பிரிந்து பிரிந்து சந்திப்பதில் சின்னதாய் ஒரு சிலிர்ப்பு..

உள்ளங்களின் சந்தித்தால்  மட்டுமே சந்திப்புக்கே உயிர்ப்பு!

மீண்டும் சந்திப்போமா என எதிர்ப்பார்ப்பு

இனி சந்திக்கவே மாட்டோமா என பரிதவிப்பு   


- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...