••••••••••••••••••••••••••••••••
*வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு மூன்றாவது அமர்வு விவரணம்*
••••••••••••••••••••••••••••••••
நமது மகாகவி பாரதி தமிழ் சங்கம் நடத்தும் பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்புகளின் மூன்றாவது அமர்வு 25.10.25 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஜாமிங் ரூமில் துவங்கியது.
சிறுவர்கள் பங்கேற்கும் குறும்பட படப்பிடிப்பு மறுநாள் இருந்த காரணத்தினால் சிறார்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு முதலில் துவங்கியது. அதில் கலந்து கொண்டோர்:
ஸ்ரீ யாழினி,
ஜனனி, அ.
சாய் பிரணவ், செ.
லக்ஷித், ல.
பா. ஆதவ்
சு.வ. அவினாஷ்,
பு. நா. ஸ்ரீ நிகேதன்,
அர்மான்,
அர்ஃபா,
வருண்,
ஆயிஷா,
சாய் மகிழன்,
ஷிவ் யுக்ரா.
வழக்கம்போல் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு அவர்கள் படித்து முடித்த பின் அதன் மீது வினாக்கள் கேட்கப்பட்டன அனைத்து குழந்தைகளும் கதையைப் படித்ததோடு அதை உள்வாங்கி பதிலளித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. பிறகு திருமதி மகாலட்சுமி அவர்கள் *சுழல் நாக்கு பயிற்சி* (toungue twister) பாக்கியம் ஒன்று சொன்னதும் அதனை பல குழந்தைகள் தவறு ஏதுமின்றி மிகச் சிறப்பாக சொன்ன விதம் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது. நாடக பயிற்சி இருந்ததால் குழந்தைகள் கிளம்பினர்.
பிறகு பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்ந்து துவங்கியது. அதில் கலந்து கொண்டோர்:
ஸ்ரீவி,
மகாலட்சுமி,
காமாட்சி,
சிவகாமி,
அமுதவல்லி,
லட்சுமி நாராயணன்,
மீ. முகமது சுலைமான்,
இரா. சண்முக சுந்தரம்,
ஸ்ரீவித்யா,
வி. கோமதி,
பிரேமலதா
இந்த அமர்வில் திருமதி. பிரேமலதா அவர்கள் *கடுகு வாங்கி வந்தவள்* என்ற கன்னட எழுத்தாளர் பாரதி அவர்கள் எழுதிய புற்றுநோய் நோயாளி ஒருவர் சந்தித்த கடினமான தருணங்கள் – அதனை எதிர்கொண்டு வெற்றியோடு மீண்டும் இயல்பான வாழ்க்கையை துவங்கிய சந்தோஷமான தருணங்கள் என உண்மை சம்பவத்தை விவரிக்கும் நூலினை அறிமுகப் படுத்தினார்கள். நோயாளிகளை சந்திக்கப் போகையில் அவர்களுக்கு உற்சாகம் தருவதற்கு பதிலாக எதிர்மறை செய்திகளை கூறும் நண்பர்கள், உறவினர்கள் பற்றியும் – நோயாளிகளை சரியாக கையாளாத மற்றும் நன்றாக கவனிக்கும் இரு விதமான மருத்துவர்கள் பற்றியும், நோய் வந்தவர்கள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அந்த நூல் பேசுகிறது. இந்த நூல் அறிமுகத்தோடு, அந்த நூலில் இருந்து ஒரு சில முக்கிய பகுதிகளை வாசித்த திருமதி பிரேமலதா அவர்கள் ஒரு நல்ல மருத்துவ ஆலோசனையை கூறக் கூடிய அளவிலே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உரை ஒன்றையும் ஆற்றினார்கள். அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகள் பற்பல. அதன் பின் வாசகர்கள் பலர் அவர்களது கருத்துக்களையும் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது உயிரோட்டமாக அந்த அமர்வு நடந்ததற்கு அத்தாட்சியாக இருந்தது.
ஆறு மணி அளவில் ஜாமிங் ரூமில் அடுத்த நிகழ்வு நடைபெற இருந்த காரணத்தினாலும், பலர் குறும்பட தயாரிப்புக் குழுவில் இருந்த காரணத்தினாலும், அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டிய நிலை இருந்ததாலும், ஆசிரியர் திரு சண்முகசுந்தரம் அவர்களுடன் கலந்து ஆலோசித்த பின், இந்த அமர்வில் இலக்கண வகுப்பு எடுக்க வேண்டாம் என முடிவு எடுக்கப் பட்டது.
அடுத்த அமர்வு 9 நவம்பர் மாலை 5 மணிக்கு ஜாமிங் ரூமில் நடைபெறும். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால், குழுவில் தெரிவிக்கப் படும்.
*நம்மிடையே – குறிப்பாக குழந்தைகளிடையே வாசிப்பு மீதான ஆர்வத்தை தூண்டுவதற்காக நடைபெறும் இந்த அமர்வுகளில் பெருமளவில் நமது பூர்வாகுடி வாசிகள் கலந்து கொள்வது இந்நிகழ்வை நடத்துபவர்களுக்கும் கலந்து கொள்பவர்களுக்கும் பயனளிக்கும் என்று மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் சுட்டிக்காட்டு விழைகிறது.*
*ஶ்ரீவி*
தலைவர்
No comments:
Post a Comment