" மோந்தா " வருகிறது
சாந்தமாய் வானமது தலைக்கு மேலே
சப்புமே கைவிரலை குழவி அது போலே
ஏந்திழையின் கூந்தலாம் மேகங்கள் எங்கே?
எங்காவது போட்டியோ? சென்றதோ அங்கே?
வேந்தனாய் பவனி வரும் கதிரோனும் காணோம்
"விரியவா? வேண்டாவா?" வினவும் தாமரையும்
ஆந்தையின் கண்களாய்க் காற்றழுத்த மண்டலம்
அடிக்கடி தொலைக்காட்சியில் காட்டி மிரட்டலும்
பேந்த பேந்த மரத்தில் பறவைகள் விழிக்குதாம்
பிள்ளை குட்டிகள் வயிற்றை பசியும் கிள்ளுதாம்
"மோந்தா" புயலது புறப்பட்டு வருகிறது
முதுகை உரசி அது கடந்தால் நல்லது
ஆந்திரா, ஒடிஸா மேல் அப்படி ஒரு மோகம்
ஆண்டு தோறும் அங்கு சென்றே தீரும் தாகம்
தீந்தமிழாய்க் குளிருது உடலும், காதும்
தின்பண்டம் டப்பாக்களில் அதுவே போதும்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 27/10/2025
No comments:
Post a Comment