*மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரணம்*
ஏழு பிப்ரவரி 2026 மாலை 5:30 மணியளவில் பன் பயன்பாட்டு பெருவரங்கம் நிரம்பி வழிந்தது. ஆர்வமுடன் நமது உறுப்பினர்கள் அணி அணியாய் வந்து அமர்ந்தனர். மங்கலகரமான குத்து விளக்கு ஏற்றலுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. குத்துவிளக்கை ஏற்றியோர்:
குத்துவிளக்கு ஏற்றியவர்கள்
1. திரு. சி. சுப்ரமணியன்,
2. திரு. IB. ஶ்ரீநிவாசன்,
3. திருமதி. புவனேஸ்வரி திருஞான சம்பந்தம்,
4. திருமதி. லலிதா கிருஷ்ணன் மற்றும்
5. திரு.சாம்பசிவம்
அழகிய தமிழில் நல்லதொரு வரவேற்புரையினை
திருமதி. ஹேமா வெங்கட்ராமன் வழங்கினார்.
முதலாவதாக மகளிரைப் பற்றி அவர்தம் மேன்மை குறித்து நடைபெற்ற பேச்சரங்கத்தில் எட்டு ஆடவர் தங்கள் சிறப்புரைகளை நல்கினர்.
*பேச்சரங்கத்தின் எண்மரும் அவர்கள் பேசிய தலைப்பும்*:
1. திரு. திருஞான சம்பந்தம் (மறக்கவியலா பெண்மணி - புற்றுநோய் மருத்துவர். சாந்தா)
2. திரு. IB . ஶ்ரீனிவாசன் (மனைவி)
3. திரு. வெங்கட் ராமன் (அம்மா)
4. திரு. செங்கதிர்ச் செல்வன் (மாமியார்)
5. திரு. இ.ச. மோகன் (பாட்டி)
6. திரு. செல்வகுமார் (மகள்)
7. திரு. லக்ஷ்மி நாராயணன் (மறக்கவியலா பெண்மணி: பெண் கல்விக்கு வித்திட்ட திருமதி. சாவித்ரி பாய் புலே)
8. திரு. நாகராஜன் (சகோதரி)
இந்த எட்டு பேரும் தடையில்லா நடையில் நல்ல தமிழில் தத்தம் தலைப்புகளை மெருகேற்றும் வகையில் மிக அருமையாக உரையாற்றியது எத்திக்கும் மகளிர் பெருமை பேசும் அளவிலே தித்திக்கும் படி அமைந்திருந்தது.
எண்மர் பேச்சு எண்திசையிலும்
நம் தமிழ்ச் சங்க பெருமையை பறைசாற்றியது.
நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களாக இருந்து தங்கள் கடமையை செவ்வனே ஆற்றிய மலர்விழி மற்றும் மகாலட்சுமியை நம் சங்கம் பாராட்டி மகிழ்கிறது.
பேச்சரங்கம் முடிந்ததும் நம் பூர்வாவின் பெண்மணிகள், பாரதி தமிழ்ச்சங்கத்தின் கண்மணிகள்,
பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடை அணிந்து மிகச் சிறந்ததொரு அணிவகுப்பினை நடத்திக் காட்டினர்.
வண்ணமிகு உடை அணிந்து, அந்தந்த மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் செவிகளுக்கு விருந்தாக நல்ல இசை பின்னணியில் ஒலிக்க, வண்ணமிகு ஆடையுடன் எழில் மிகு நடையில் நடந்து வந்து கண்களுக்கு விருந்து கொடுக்க, நம் கண் முன்னே பாரதத்தின் பல்வேறு மாநிலங்களை கொண்டு வந்து நிறுத்திய அனைத்து பங்கேற்பாளர்களும் தங்களது அயராத பயிற்சி யின் காரணமாக ஒரு மினி பாரத விலாசை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
இந்த *பாரம்பரிய உடை அணிவகுப்பு* ஒட்டுமொத்த அரங்கின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இடைவிடாது ஒலித்த கரவொலி நிகழ்ச்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறியது.
இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களாக இருந்த செயல்பட்ட ஸ்ரீவித்யா மற்றும் சிவகாமி இருவருக்கும் அவர்களுக்கு உதவிகரமாக தங்கள் கரங்களை நீட்டி உதவிய பிற நிர்வாகிகளுக்கும் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டுதல்கள்.
*பாரம்பரிய உடை அணிவகுப்பு பங்கேற்பாளர்கள் - அவர்கள் தேர்ந்தெடுத்த பாரம்பரிய உடை*:
1. திருமதி. மல்லிகா மற்றும் திருமதி. நல்லம்மை (களத்து மேட்டு கண்ணம்மாக்கள் - தமிழகத்தின் கண்டாங்கி சேலை)
2. திருமதி. மைதிலி நீலகண்டன், திருமதி. லக்ஷ்மி, திருமதி. ஹேமா வெங்கட்ராமன் (மடிசார் மாமிகள்)
3. திருமதி. மல்லிகாமணி (மலையாள மங்கை - முண்டு)
4. திருமதி. சுபாஷிணி, திருமதி. சுவாதி (தெலுங்கு தேவசேனாக்கள் - கச்சம் )
5. திருமதி. ரமா (குஜராத்தி)
6. திருமதி. ரம்யா வெங்கட்ராமன் (கூர்கி)
7. திருமதி. பிரபுகுமாரி (மராத்தி)
8. திருமதி. விமலா (ராஜஸ்தானி)
9. திருமதி. துர்கா சாய்ராம் (பெங்காலி - கல்கத்தா காளி)
இந்த நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் வடிவமைக்கப் படாமல் மகளிரே நாட்டின் மேன்மைக்கு அடித்தளம் எடுபவர்கள் என்கின்ற கருத்தோடு, பலதரப் பட்ட கலாச்சாரமும் நடை உடை பாவனைகள் இருந்தாலும் *வேற்றுமையில் ஒற்றுமை* என்பதை உயர்த்தி பிடிக்கும் பாரதத்தின் மேன்மையை போற்றுவதாகவும், ஒன்பது மாநிலங்களின் சிறப்பான பாரம்பரிய உடை அலங்காரத்தோடு கம்பீரமாக மேடை ஏறி தமது திறமைகளை பூர்வ மகளிர் பலர் வெளிப்படுத்தும் நோக்கிலும், ஒரு மினி பாரத விலாசாக, *தாய் மண்ணே வணக்கம்* எனப் போற்றி புகழும் விதத்திலும் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. பார்வையாளர்களின் மனங்களை இந்நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது. அணிவகுப்பில் கலந்து கொண்ட சகோதரிகளின் நல்ல பயிற்சிக்கு உறுதுணையாக நின்ற பொறுப்பாளர்களோடு உடன் நின்று வழிகாட்டி அணிவகுப்பை வடிவமைத்த பிரபு குமாரி மற்றும் துர்கா அவர்களை நமது சங்கம் மனதார பாராட்டுகிறது.
நமது தமிழ்ச் சங்க வரலாற்றில் இல்லாத புதுமையாக நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு நிகழ்ச்சியை அரங்கம் நிறைந்த கர ஒலியோடு தலைவர் அறிவித்தார். நமது தமிழ்ச் சங்கத்தின் ஆணி வேராக இருந்து, சங்க வளர்ச்சிக்கு தனது முழு பங்களிப்பை செலுத்தி வரும் *நமது நிதிச் செயலர் - பன்முக கலைஞர் சாய்ராம் ஐயா* அவர்களின் 40 ஆண்டு கால கலை உலக வாழ்வின் அங்கீகாரமாக தமிழக அரசு விருது கொடுத்து பாராட்டிய கௌரவத்தை ஒட்டி நமது தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அவருக்கு விருது வழங்கும் விழா நடந்தது. *மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொன்வசந்தம்* என்கின்ற விருதினை தமிழ்ச் சங்கம் வழங்கி மகிழ்ந்தது. சாய்ராம் ஐயா அவர்களின் 30 ஆண்டுகால நண்பரும் இயக்குனரும் வெள்ளித்திரை சின்னத்திரை நடிகரும் ஆன *திரு.அபிஷேக் சங்கர்* அவர்கள் நமது வேண்டுகோளை ஏற்று அவ்விருதினை வழங்கினார்கள். திரு. சாய்ராம் அவர்களுக்கு பொன்னாடையை சங்கத் தலைவர் திரு ஸ்ரீவி அவர்களும் சாய்ராம் அவர்களின் நண்பர் மேடைப் பாடகர் மோகன் அவர்களும் இணைந்து அணிவித்தனர்.
பிறகு *பூர்வாவின் சிறந்த பெண்மணி* விருது நமது நிர்வாக குழு உறுப்பினரும் இயன் முறை மருத்துவருமான *திருமதி. சுபாஷினி* அவர்களுக்கு திரு. அபிஷேக் சங்கர் அவர்களால் வழங்கப் பட்டது.
விருதுகள் வழங்கப்பட்ட பின் தலைவர் உரையோடு விருதுகள் பெற்ற சாய்ராம் ஐயா அவர்களும் திருமதி சுபாஷினி அவர்களும் ஏற்புரை வழங்கினர். பிறகு, சிறப்பு விருந்தினர் திரு. அபிஷேக் சங்கர் அவர்கள் ஒரு நல்லதொரு சுவையான சிறப்புரையை வழங்கினார்கள். பின் சாய்ராம் ஐயாவின் சிறுவயது நண்பர் திரு. மோகன் அவர்கள் உரையாற்றினார். நேயர் விருப்பத்திற்கு இணங்க கமல் அவர்களின் பாடலையும் பாடினார்.
அதன்பின், சிறப்பு நிகழ்ச்சியின் நிறைவாக *விளையாடலாம் வாங்க* எனும் கலகலப்பான போட்டிகள் மகளிருக்காக நடத்தப் பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து அணிகளாக ஐந்து திணைகளின் பெயர்களில் மொத்தம் 20 மகளிர் கலந்து கொண்டனர்.
*காவியத்தை தேடி*
*சாதனைப் பெண்களை தேடி*
*பாடலின் முதல் வரியைத் தேடி* போன்ற பல சுவையான போட்டிகள் நடந்தேறின. இப் போட்டிகளின் வெற்றியாளர்கள்:
1. திருமதி. துர்கா சாய்ராம்
2. திருமதி. ஶ்ரீவித்யா வெங்கடேஸ்வரன்
3. திருமதி. கிருஷ்ணவேணி
4. திருமதி. காமாக்ஷி.
இந்தப் போட்டிகளை வடிவமைத்து திறம்பட நடத்திய பொறுப்பாளர்கள் அனிதா பாரதி, தேவி அருண், அமுதவல்லி,
மற்றும் சுல்தானா . இவர்களுக்கு தமிழ் சங்கத்தின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.
திருமதி லட்சுமி அவர்கள் நல்ல தமிழில் அருமையாக நன்றியுரை கூறினார்.
பின் நாட்டுப் பண் இசைக்கப் பட்டதோடு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது..
இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் தனது அழகான சொல்லாட்சியாலும் அனைவரின் மனம் கவரும் குரல் வளத்தாலும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய நமது சங்கத்தின் செயலர். திருமதி. மலர்விழிக்கு நமது சங்கத்தின் உளம் நிறை நன்றிகளும் பாராட்டுதல்களும்.
கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களாக பயிற்சி மேற்கொண்டு தங்களது திறமைகளை மேடையில் காட்டி அனைவரையும் மகிழ்வித்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பயிற்றுவித்து பயிற்சி கொடுத்து தங்கள் பொன்னான நேரத்தை நிகழ்ச்சியின் வெற்றிக்காக செலவழித்து உழைத்திட்ட அமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
வழக்கம்போல தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக நிகழ்ச்சியின் வெற்றிக்கு கருத்தாலும் கரத்தாலும் உழைத்திட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றிகள் பற்பல.🙏
*ஶ்ரீவி*
*தலைவர்*
No comments:
Post a Comment