Sunday, February 1, 2026

மனைவி

 மனைவி,*


 எங்கிருந்தோ வந்தாள் என் மனைவி என்று சொன்னாள்,

 தாய் தந்தை வி ட்டு,அவள் தஞ்சமென வந்து விட்டாள்,

 தன் குடிஇனி இதுவே என தத்தெடுத்து வந்து விட்டாள்,

 அறுசுவை உணவினை அமுதமாய் படைத்திடுவாள்,

 ஆணுக்கு பெண் சமம் என அலுவலகம் சென்றிடுவாள்,

 கணவன் சுமையை அவள் கணிசமாய்  பகிர்ந்திடுவாள்,

 கண்ட செலவினை அவள் கணிசமாய் குறைத்திடுவாள்,

 வசதி வாய்ப்பினை வளமாக உயர்த்திடுவாள்,

  வாரிசுகளை அவள் வாட்டமின்றி தந்திடுவாள்,

  குழந்தை வளர்ப்பில் அவள் கோபுரம் போல்  வளர்த்திடுவாள்,

 அம்மா என்று அழைக்கையிலே ஆனந்தம் கொண்டிடுவாள்,

 பள்ளி படிப்பினை அவள் பாசத்துடன்  அளித்டு வாள்,

 தன் கணவன் பெறுமைத னை தனக்குள் எண்ணி மகிழ்ந்திடுவாள்,

 அவன் உணவு உண் கையிலே  ஓரமாய் நின்று ரசித்திடுவாள்,

 தலைவலி என்று சொன்னால் தைலம் தேய்த்திடுவாள்,

 உடல் வலி என்று சொன்னால் உருகியே நின்றிடுவாள்,

 படுக்கையில் படுத்திட்டால்  பாசமுடன் பணிவிடை செய்திடுவாள்,

 தனக்கு இது வேண்டுமென தற்குறியாய்  கேட்டு அறி யாள்,

 இருப்பது போதுமென இன்பமாய் இருந்திடுவாள்,

 இறுதி மூச்சு வரை இணைபிரியாமல் வந்திடுவாள்,              


 அளவிலா அன்பும், தாயினை ஒத்த பாசமும், ஈர் உடல் ஓர் உயிர்  என்ற எண்ணம் கொண்டு எப்பொழுதும் துணை நிற்கும் கணவன் அமைந்திட்டால்,

 ஏழேழு ஜென்மத்திற்கும்,

 இவனே என் கணவனாக வரவேண்டும்  என இறைவனை வேண்டிடுவாள்.           


 இது போன்ற மனைவி அமைய இறைவன் அவனுக்கு வரம் தர வேண்டும்.

சிசு 

2/2/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...