*அழகு*
கண்ணிற்கு மை அழகு,
கவிதைக்கு பொய் அழகு,
பூவிற்கு நிறம் அழகு,
பூவைக்கு நாணம் அழகு, கடலுக்கு அலை அழகு,
காக்கைக்கு கருப்பழகு,
மயிலுக்கு தோகை அழகு, மன்னவருக்கு குடி அழகு,
கோபுரத்து சிலை அழகு, கோடி இருந்தாலும் கொடை அழகு,
நீருக்கு குளுமை அழகு,
நெருப்பிற்கு ஜ்வாலை அழகு,
தாயின் அன்பழகு,
தகப்பனின் பண்பழகு,
தலைவனிடம் பணிவழகு,
தொண்டனிடம் பின்பற்றுதல் அழகு,
ஆதவனின் ஒளி அழகு,
ஆன்மீகத்தில் மெய் அழகு,
மண்ணிற்கு மாந்தர் அழகு, இத்தனை அழகு இருந்தும் உன் மனம் எதை அழகு என்று நினைக்கின்றதோ அது ஒன்றுதான் உண்மையான அழகு.
சிசு
16/01/26
No comments:
Post a Comment