•••••••••••••••••••••••••••••••
மேதினி போற்றும்
மே தினம் வாழ்க
•••••••••••••••••••••••••••••••
கதிரவன் எழும் முன் கருக்கலில்
எழுந்து
கலப்பை பிடித்து கருவிகள் ஏந்தி
கரங்கள் சிந்தும் குருதியினாலே
காட்டை மேட்டை கழனிகள் ஆக்கி
நாட்டைத் திருத்தி ஆலைகள் செய்து
நலமுடன் மக்கள் நன்றாய் வாழ
நாளும் பொழுதும் வியர்வை சிந்தி
நரம்பும் சதையும் நொந்து போக
உழைக்கும் மக்கள் இருப்பதினாலே
உலகோர் எல்லாம் சுகமாய் வாழ்வர்
உன்னத உழைப்பால் உலகை உயர்த்தும்
உழைப்பவர் தினமாம் இந்த நாளே!
உழைக்கும் கரங்கள் இணையட்டும்!
உழைப்போர் நிலையும் உயரட்டும்!
உலகம் அவர்களை மதிக்கட்டும்!
அவர்கள் வாழ்வும் சிறக்கட்டும்!!
மே தினம் வாழ்க! மே தினம் வாழ்க!!
மேதினி போற்றும் மே தினம் வாழ்க!!
உழைப்போர் வாழ்க! உழைப்போர் வாழ்க!
உலகம் அவர்களை போற்றி மகிழ்க!!
மே_தின_நல்வாழ்த்துகள்
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment