*குழந்தைகள் தின சிறப்பு பல்சுவை நிகழ்ச்சிகள் விவரணம்*
நவம்பர் 14 2025, வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு பூர்வா வின்டர்மியர் பன் பயன்பாட்டு அரங்கத்தில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது.
சரியாக மாலை 5:30 மணிக்கு ஐந்து குழந்தைகள் குத்து விளக்கை ஏற்றியதோடு நிகழ்ச்சி துவங்கியது. அக்குழந்தைகள்:
ஸ்ரீநிகேதன்,
திருவிக்ரம்,
அர்ஃபா,
ஜனனி அருண் மற்றும் சாதனா ஸ்ரீ.
குத்துவிளக்கு ஏற்றியதும், சிறுவன் கிருஷ்ணா தனது மழலை குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தான்.
வரவேற்புரையை சிறப்பாக செல்வி. சாதனா ஸ்ரீ நிகழ்த்தினார்.
தங்களது மழலைக் குரலில் திருக்குறள் சொல்லியும், கம்பீரமாக உரையாற்றியும், இனிமையாகப் பாடியும் குழந்தைகள் அரங்கத்தில் இருந்தோரை மகிழ்வித்தனர்.
*திருக்குறள் கூறிய மழலையர்:*
ஜனனி அருண்,
சாய் மகிழன்,
ரித்திப்ரதா + சித்திப்ரதா,
வர்ஷா,
சங்கமித்ரன்.
பாரதியின் வைர வரிகளுக்கு உயிரூட்டி உரை வீச்சு நிகழ்த்திய *பேச்சரங்க பேச்சாளர்கள்:*
1. திருவிக்ரம் : *பாதகம் செய்வோரைக் கண்டு பயம் கொள்ளலாகாது.*
2. முகமது அர்மான் :
- *ஓடி விளையாடு நீ ஓய்ந்திருக்கலாகாது*
3. கௌசலேஷ் : *தெருவெல்லாம் தமிழ் முழக்கமசெழிக்கச் செய்வோம்*
4. நித்தின் :
*சின்னஞ் சிறு குருவி போலே - நீ திரிந்து பறந்துவா*
5. ரோஷனா:
*எல்லோரும் ஒருகுலம் -எல்லோரும் ஓர் இனம்*
தங்கள் இனிய குரலால் மெல்லிசையில் மயக்கியவர்கள்:
பாடகர்கள்:
ஸ்ரீநிகேதன்- *தூளியிலே,*
தீப்தி- *அஞ்சலி அஞ்சலி,*
சஹானா- *அகநக முகநக*,
சம்யுக்தா - *மருதாணி*,
நிவர்ஷனா- *நன்னாரே.*
திருக்குறள் பேச்சரங்கம் மெல்லிசை பாடல்கள் என மேடையில் குழந்தைகள் கலக்கிய பின் அவர்களுக்கான *வினாடி வினா* நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மஞ்சுளா மற்றும் ஸ்ரீவித்யா அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். ஐந்து முதல் எட்டு வயது, ஒன்பது முதல் 11 வயது, 12 முதல் 15 வயது என மூன்று பிரிவுகளாக வினாடி வினாக்கள் நடத்தப்பட்டன. குழந்தைகள் விதிகளை ஒழுங்காக பின்பற்றி கைகளை உயர்த்தி அனுமதி வழங்கப்பட்ட பின், துடிப்போடு பதில் சொன்ன விதமும் அவர்களது ஒழுங்கும் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தன. மகிழ வைத்தன. குழந்தைத் தனமாக ஓரிரு கேள்விகளுக்கு தவறாக விடை அளித்த போதும் எழுந்த சிரிப்பொலி அடங்க சில வினாடிகள் ஆகின. டெலிவிஷன் என்பதன் தமிழாக்கம் என்ன என்று கேட்டதற்கு ஒரு சிறுமி டிவி என்று சொன்னது மிகப்பெரிய சிரிப்பு அதிர்வலைகளை உண்டாக்கியது.
அதைப்போலவே,
பழமொழியை பூர்த்தி செய்யச் சொல்லி புலிக்குப் பிறந்தது என்று கேட்டதும் ஒரு சிறுவன் புலிக்குட்டி என்று சொன்னதும் சிரிப்பலைகளால் அரங்கமே அதிர்ந்தது. கலந்துகொண்டு சரியான பதில் சொன்ன அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பேனா பரிசளிக்கப்பட்டது அதோடு சாக்லேட்டும் கொடுக்கப்பட்டன.
பிறகு தலைவர் ஸ்ரீவி ஐயா அவர்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும் திரையிடப்படவிருக்கும் குறும்படம் பற்றியும் பேசினார்.
நிதிச் செயலர் சாய்ராம் ஐயா அவர்கள் குறும்படம் பற்றி அறிமுக உரையாற்றினார்.
நாடகாசிரியர் மகாலட்சுமி அவர்கள் ஒரு சிறு உரை வழங்கினார்.
அதன் பிறகு எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த *அலை(பேசி)கள் ஓய்வதில்லை* எனும் குறும்படம் திரையிடப் பட்டது.
படம் நன்றாக தெரிவதற்காக அரங்கத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப் பட்ட பிறகு இருளில் திரையிடப்பட்ட அந்தக் குறும்படம் உலக மக்களுக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டிய அவசியத்தை – அதாவது அலைபேசி எனும் மோகத்தால் கட்டுண்டு, அடிமைப்பட்டு, குடும்பங்களையே – உறவுகளையே மறந்து போகும் நிலையில் இருக்கும் மனித குலத்தை எச்சரித்து கைப்பிடித்து வெளிச்சத்தை நோக்கி அழைத்து வரும் விதமாக இருந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. நடித்த குழந்தைகள் மிக இயல்பாக அருமையாக நடித்திருந்த விதமும் எந்த ஒரு கேமரா அச்சமும் இல்லாமல் நடித்த பாங்கும் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது. இயக்கிய சாய்ராம் அவர்களுக்கும்
நாடகாசிரியர் மகாலட்சுமி அவர்களுக்கும் துணை புரிந்த தயாரிப்புக் குழுவைச் சார்ந்த துர்கா சாய்ராம், தேவி அருண் ஸ்ரீவித்யா, மலர்விழி, லட்சுமி நாராயணன் ஆகியோருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.
குறும்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்:
ஆதவன்,
அகரன்,
யாழினி,
அர்ஃபா,
பிரிதிவ்,
வருண்,
ஆராதனா,
லக்ஷித்,
ஆயிஷா,
ஆதிரா,
ஹர்ஷிதா
குறும்படம் திரையிடப்பட்ட பின், குறும்படத்தை தயாரித்த குழுவினரோடு குழந்தை நட்சத்திரங்களும், கேமராமேன் பாலா அவர்களும் மேடை ஏறி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விதம் மிக குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
நிறைவு நிகழ்ச்சியாக பல் சுவை நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பிய குழந்தைகளுக்கு அன்பு பரிசாக சிறுவர்களுக்கான நூல்கள், *சிறப்பு விருந்தினர் திரு ஜவகர் கிருஷ்ணன், தாளாளர் விவேகானந்தா பயிலகம்* அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டன.
திரு ஜவகர் அவர்களுக்கும் திரு பாலா அவர்களுக்கும் நமது சங்கத்தின் சார்பில் நூல்கள் அன்பளிக்கப் பட்டன. பிறகு, அவர் குழந்தைகள் தின செய்தியாக நல்லதொரு சிறப்புரை ஆற்றினார்.
மொத்த நிகழ்ச்சியையும் செல்வி. ஆராதனா மிகத் திறம்பட தொகுத்து வழங்கினார்.
நன்றியுரை செல்வன் சத்யன் வழங்கினார்.
பின்னர் தேசியப்பண் இசைக்கப் பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
*நன்றி நவிலல்*
மிகச் சிறப்பானதொரு குறும்படத்தை நமது கன்னி முயற்சியிலேயே வெற்றிகரமாக எடுக்க உதவிய திரு சாய்ராம் அவர்கள் தலைமையிலான தயாரிப்புக் குழுவிற்கு நமது உளம் நிறைந்த நன்றிகள்.
ஐந்து பயிற்சி அமர்வுகளிலும் கலந்து கொண்டு தங்களை தாங்களே பட்டை தீட்டிக் கொண்டு மேடையில் ஏறி கலக்கிய அனைத்து பேச்சரங்க திருக்குறள் ஒப்பித்த மெல்லிசையில் பாடிய குழந்தைகளுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
பயிற்சிக்கு இடம் கொடுத்து உதவிய சிவகாமி அவர்களுக்கும் பயிற்சிகளை ஒருங்கிணைத்த சிவகாமி மற்றும் மல்லிகாமணி அவர்களுக்கும் நமது நன்றிகள்.
கடந்த 15 20 நாட்களுக்கு மேலாக குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்பியும் குறும்பட தயாரிப்பிற்கு அனுப்பியும் உதவியதோடு இல்லத்திலும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்த பெற்றோர்களுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகள்.
வழக்கம் போல சிறப்பாக காணொளி எடுத்து யூடியூபில் பதிவேற்ற இருக்கின்ற *திரு விஜய் கணேஷ்* அவர்களுக்கும் மிகச் சிறந்த ஒலி அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்த *திரு. சசிகுமார்* அவர்களுக்கும் நமது நன்றிகள்.
பெயரை வெளியே சொல்ல வேண்டாம் என்று சொல்லி அனைவருக்கும் நேற்று பாப்கார்ன் வழங்க ஏற்பாடு செய்த அந்த நல்ல இதயத்திற்கும் நமது நன்றிகள்.
நமது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பித்த நமது *குடியிருப்பு நலச் சங்க உதவி தலைவர் திரு சரவணன்* அவர்களுக்கும் நமது நன்றி.
அதுபோலவே நமது இந்த கொண்டாட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு குறும்படத்தை ஒளிப்பதிவு செய்து உதவிய *திரு பாலா* அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
திரு ஜவகர் ஐயா அவர்களின் இணையரும் விவேகானந்தா பயிலகம் தலைமை ஆசிரியையும் ஆன *திருமதி திலகவதி ஜவகர்* அவர்கள் நமது அழைப்பினை ஏற்று வந்திருந்து சிறப்பித்தார்கள். அவர்களுக்கும் நமது நன்றி.
*நன்றி நவிலலில் நிறைவாக, ஒரு மிக நிறைவான நன்றியை சொல்ல வேண்டும். நிகழ்ச்சியின் தரத்தை பார்த்து மனம் மகிழ்ந்த நமது உறுப்பினர் திருமதி. லலிதா கிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடமே ₹. 2000/– நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.*
நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த சங்கத்தின் உறுப்பினராக இல்லாத பிற பூர்வாகுடி வாசிகளுக்கும் நமது நன்றிகள் அவர்கள் நமது சங்கத்தில் இணைந்து சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என விரும்பி வேண்டி மகாகவி பாரதி தமிழ் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
நன்றி🙏
- ஸ்ரீவி
No comments:
Post a Comment