கொழுத்தாடு பிடிப்பேன்
அ. முத்துலிங்கம்
ஒரு கருத்துக் கண்ணோட்டம்
இலங்கைத் தமிழில் சித்தரிக்கப்பட்ட
சிறுகதை.
அகதியாக கனடா நாட்டுக்கு வளமான எதிர் காலத்தை நோக்கிச்சென்று, சகலையின வீட்டில் தங்கியவனின்கதை.
சந்தர்ப்ப வசமாக கடும்சிறையில்
அடைபட்டு , அரசி எலிசபெத்துக்கு விடுதலை வேண்டி லிகிதம்எழுதுவதாக , கதை.
இச்சம்பவங்கள் 1980களில் நடந்து இருக்க வேண்டும்.
அப்போது வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கைத்
தமிழர்கள் பட்ட சிரமத்தை இக்கதையின் மூலம்அறியலாம்.
மனவி, மக்களைப் பிரிந்து சகலன் வீட்டில் வாழ்கையில், அவர் மனைவி மேல் ஏற்படும் நாட்டங்களை நாசூக்காக விவரிக்கிறார், ஆசிரியர்.
சகலன் மகளோடு " கொழுத்தாடு" விளையாடுகையில் ஏற்பட்ட " பொருத்தமற்ற சூழ்
நிலை "காரணமாக கடும் சிறை வாசத்தை அனுபவிக்க நேருகிறது.
இக்கதையைப் படித்தால் இலங்கைத்தமிழின் மணத்தை உணரலாம்.
வளம்தேடி வெளிநாடு சென்றாலும் ,மனம் , வளமில்லா பெற்ற நாட்டையே நாடுகிறது என்பதை, சுட்டுகிறது இக்கதை.
சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
பின் குறிப்பு:
கொழுத்தாடு விளையாட்டு" என்பது உண்மையில் "கொழுத்தாடு பிடிப்பேன்" என்ற ஒரு குழந்தைகள் விளையாட்டு ஆகும். இதில் ஒரு குழந்தை "கொழுத்தாடு பிடிப்பேன்" என்று சொல்ல, மற்றொன்று "கொல்லியாலே சுடுவேன்" என்று கூறி ஓடும்.
நம் ரஜினியின்" மாத்தாடு மாத்தாடு மல்லிகே"
விளையாட்டை நினைவுபடுத்துகிறது!
- இ.ச.மோகன்,
No comments:
Post a Comment