காவிய புருஷனின் காலணி என்றால்
அரியணை ஏறலாம்
அரியணை ஏறி நாடாளலாம்.
பாவி மனிதரின் காலணி என்றால்
வீட்டு வாயிலில்
தவமிருந்து
காத்திருக்கும்.
இணை பிரிந்தால்
உயிர் வாழா
கவரிமா இனமோ!
துணையோடு இருத்தலே
வாழ்வதன் பொருளோ?
செருப்பு எறிதல்,
‘செருப்பால் அடிப்பேன்’ என குமுறுதல்,
பிடிக்காதோர் படங்களுக்கு
செருப்பு மாலை போடுதல்,
இவை எல்லாம் கோபத்தின் வெளிப்பாடாம்.
நாளெல்லாம் உமைச் சுமந்து
மேனியெல்லாம் நாளும் தேய்ந்து
உமக்காக உழைக்கின்ற எமை
அவமானச் சின்னங்களாய்
ஆக்குதல் தகுமோ!
பதில் கூற இயலுமோ உலகத்தீரே!
- ஸ்ரீவி
No comments:
Post a Comment