👍👍
செருப்பு பற்றிப் பல அடிகள்
-----
செருப்புகள்
"இணைந்திருப்பதே பேரின்பமா?
தனிமைதான் பாதுகாப்பா?"
ஜோடியை விட்டுப்பிரிந்த " ஒத்த செருப்பு" காதல், காமம், அன்பு, வன்மம் என எவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்தியது!! ஒத்த செருப்பைக் குறைத்தே மதிப்பிடமுடியாது!
அன்று ஹவாய் செருப்புகளில் நடந்தே எங்கும் செல்லலாம்
இன்று செருப்புகளிலும் மேட்டுக்குடிகள் உண்டு
ஆயிரக்கணக்கில் விலை, முத்திரையிடப்பட்ட செருப்புகளுக்கு; சமூகத்தில் தகுதிநிலைக் குறியீடுகளாக.
ஆனால் ,வேலை தேடி அலைபவர், ஐந்து நட்சத்திர ஓட்டலில்
நுழைபவர் எனப் பாரபட்சம் பார்க்காமல் உழைக்கும் செருப்புகள்!
சர்க்கரை வியாதி கண்டவரின் கால்களுக்குத் தனிச்சிறப்பு கொண்ட செருப்புகள்!
அன்று வெளியில் செல்ல மட்டும் செருப்பு
இன்று வீட்டிலும்வெளியிலும்!
ஆடைகள்வைக்க அலமாரிகள் போல செருப்புகளுக்கும் உண்டு!
கால்களில் அணிவதை தலையில் வைத்துக் கொண்டாடாத குறை!
செருப்புகளுக்கும் தேடலுக்கும் சம்பந்தம் உண்டோ- ஆங்கிலத்தில் நடந்தே தேயும் செருப்பின் அடிபாகத்துக்கும், தன்னைத்தேடி அலையும் ஆன்மாவுக்கும் உரித்தான சொற்கள் ஒரே மாதிரி ஒலிக்கும்போது தோன்றுகிறதே( sole and soul)
வீட்டில் சமையல் செய்வதும் செருப்பு அணிந்தே; உப்புமா கிண்டுவது மட்டும் விதிவிலக்கா என்ன?!
-மோகன்
No comments:
Post a Comment