தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!
அறியாமை இருள் நீங்கி அறிவின் ஒளி பரவட்டும்!
வேற்றுமைகள் மறந்திங்கே
ஒற்றுமை தான் ஓங்கட்டும்!
மனமாச்சரியங்கள் மறைந்து தான் போகட்டும்
மனிதமும் நேயமும் தழைத்திங்கே ஓங்கட்டும்!
மனித மனங்களைப் பிடித்தாட்டும்
மாயப் பிசாசு மறைந்தே போகட்டும்.
தீப ஒளியின் ஜோதி எங்கெங்கிலும் பரவட்டும்.
மகிழ்ச்சியும் ஆனந்தமும் பல்கிப் பெருகட்டும்.
தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!
ஶ்ரீவி
==========================================================
எத்திசையும் தீபாவளி
குத்துவிளக்குகள் பல ஏற்றப் படட்டும் எங்கும்
கோலங்கள் வண்ணங்கள் பூசிக் கொள்ளட்டும்
சத்தம் குறைவான வெடிகள் வெடிக்கட்டும்
சமையல் இன்றாவது வீட்டில் நடக்கட்டும்
சித்திரங்கள் வானில் தீட்டப் படட்டும்
சிவகாசி தொழிலும் சீராக நடக்கட்டும்
புத்தாடையில் மாந்தர் பவனி வரட்டும்
புள்ள குட்டி சூழ புதுப் படம் காணட்டும்
மத்தாப்பில் பட்டாம்பூச்சிகள் பறந்து திரியட்டும்
மறுநாள் பள்ளி உண்டு மறந்தே போகட்டும்
முத்தமிடும் இதழில் நெய்வாசம் வரட்டும்
முறுக்கு, அதிரசம் மூச்சு முட்டட்டும்
தித்திக்கும் தமிழோடு இனிப்புகள் போட்டியாம்
தேனும் " கூட்டணியில் சேரவா?"கேட்குமாம்
எத்திசையும் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாட்டம்
இனிய உறவுகள் இன்று போல் இறுகட்டும்.
தீபாவளி நல்வாழ்த்துகள் 💐🍌🍇🙏
__. குத்தனூர் சேஷுதாஸ் 20/10/2025
==========================
No comments:
Post a Comment