*12 அக்டோபர் 25 அன்று நடந்த வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்*
கலந்து கொண்டவர்கள்:
ஸ்ரீவி,
லட்சுமி நாராயணன்,
அமுதவல்லி,
முகமது சுலைமான்,
தேவி அருண்,
லதா,
இரா. சண்முக சுந்தரம்,
இரா. பிச்சை மணி,
வெ. நாகராஜன்,
சி . ஹரிஷ்,
இரா. சுப்பிரமணியம்,
லட்சுமி,
அ. சுல்தானா,
சங்கீதா,
மலர்விழி,
காமாட்சி,
கோ, தியாகராஜன்,
விஜயலட்சுமி பாலாஜி,
ஆர். வைத்தியநாதன்,
சிறார்கள்:
கௌசலேஸ்,
அவினாஷ்,
ஸ்ரீ நிகேதன்,
ஆதிரா சரவணன்,
அர்ஃபா,
அர்மான்,
கௌசிகா,
ஜனனி.
நேற்றைய வாசிப்பு வட்டத்தில் நமது சங்க உறுப்பினர் திரு முஹம்மது சுலைமான் அவர்கள் *சாயல்* எனும் கதை தொகுப்பிலிருந்து ஒற்றைச் செருப்பு எனும் கதையை வாசித்தார்கள். கதாசிரியர் பெயர் நிஷாந்தன். இயற்பெயர் மு. மு. அஷ்ரஃப் அலி. கதாசிரியர் நமது சுலைமான் ஐயாவிற்கு உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.
தேனூர் எனும் சிறுநகரம் எப்படி மத நல்லிணக்கத்தோடு இருந்து வருகிறது என துவங்கும் கதை, சமய சந்தர்ப்ப வசத்தால் - வதந்திகள் பரவிய காரணத்தினால் - ஏற்பட்ட சமூக பதற்றத்தின் காரணமாக எப்படி கலவரம் உருவானது என விவரிக்கிறது. கதையின் நிறைவுப் பகுதியில் எப்படி இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதோடு மீண்டும் தேனூருக்கு அமைதியும், மத நல்லிணக்கமும் திரும்ப, ஒளி தெரிகிறது என நிறைவுறுகிறது.
இந்தக் கதை வாசித்தலுக்காக மூன்று நான்கு முறை தனது இல்லத்தில் வாசித்து வாசித்து பழகியதையும், மூச்சு வாங்குதல் இருக்கும் எனக் கூறி அதனை பொறுத்தருளுமாறும் கேட்டுக் கொண்டு முகமது சுலைமான் அவர்கள் வாசிக்க துவங்கினார். அவருக்கு மூச்சிரைக்கவும் இல்லை. பிறர் மூச்சு விடவும் இல்லை. ஆம் மூச்சு விட மறந்து ஆர்வத்தோடு கதையைக் கேட்டார்கள்.
அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த சமூகப் பதற்ற சூழல் பற்றிக் கூறினார்கள். அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் திரு. நிஷாந்தன் அவர்களும் கதையை வாசித்த முகமது சுலைமான் ஐயா அவர்களும் பெற்றார்கள். முகமது சுலைமான் ஐயா அவர்களுக்கு நன்றி.
கதை வாசிப்பு முடிந்ததும் இலக்கண வகுப்பு தொடர்ந்தது. இலக்கண ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் யாப்பிலக்கணம் வகுப்பு எடுத்தார். சென்ற வகுப்பின் தொடர்ச்சியாக, இந்த வகுப்பும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேர், நிரை எனத் துவங்கி,
சீர்கள் பற்றி கூறி, அதாவது
ஓரசைச் சீர்,
ஈரசைச் சீர்,
மூவசைச் சீர்,
நான்கு அசைச் சீர்
எனத் தொடர்ந்து,
முத்தாய்ப்பாக சில திருக்குறளில் சிறப்புகளையும் தொட்டுக் காட்டி
வகுப்பு சிறப்பாக நடந்தது.
கரும்பலகையில் ஆசிரியர் எழுதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நமது உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் பதில் சொன்னதும் மிக மிக ஆர்வமாக வகுப்பை கவனித்ததும் மன நிறைவாக இருந்தது.
வகுப்பில் சொல்லப்பட்ட சிறப்புமிகு திருக்குறள் நான்கை பற்றி தனியே பதிவிடப் படும்.
அதன் பின்னர் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் இனிதே துவங்கியது. பொறுப்பாளர் மகாலட்சுமி அவர்கள் வந்திருந்த குழந்தைகளுக்கு தனித்தனியே கதைகளை கொடுத்ததோடு ஒரு சுவாரசியமான முன்னெடுப்பையும் செய்தார். அதாவது கதையை வாசித்த பிறகு அந்த சிறுவர்கள் கதையின் முடிவை தங்கள் கற்பனைக்கேற்றவாறு மாற்றி கூற வேண்டும் என்பதே அந்த முன்னெடுப்பு. சிறுவர்களுக்கு அது கடினமான ஒரு விஷயமாக இருக்கும் என்று பலர் நினைத்தாலும், அவர்களைப் பொறுத்த அளவிலே அது மிக எளிதான ஒரு விளையாட்டு போல இருந்திருக்கிறது போல. தாங்கள் படித்த கதையை கூறியவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கதையின் முடிவை மாற்றி புதிய ஒரு முடிவை கூறியது எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது பெருமைப் பட வைத்தது. கதையைச் சொன்ன குழந்தைகளில் அனேகர் தூய தமிழில் கூறியது எல்லாரையும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் பொறுப்பாளர் மகாலட்சுமிக்கு நமது நன்றிகளும் வாழ்த்துகளும்.
அடுத்த அமர்வு பற்றிய விவரம் விரைவில் பகிரப்படும்.
*ஸ்ரீவி*
தலைவர்.
No comments:
Post a Comment