ஆறுகள்
மணல் கொள்ளையை தடுக்கத்தான்
அந்த ஓட்டம் ஓடுகின்றனவோ!!!
---------
பூனைக் குட்டிகளை
ஈரத் தரையிலிருந்து
தான் விரித்தக்
கோணிச் சாக்கில்
இடம்பெயரச் செய்தவள்,
ஞாபகப் படுத்துகிறாள் *நடுங்கிய மயிலுக்கு போர்த்திய மன்னனை!*
---------------
கடுங்கோடைக்கும்
பனை ஓலை விசிறியே
போதுமென்றிருந்த அப்பா
ஒரு பின்பனிக் காலத்தில்
பனி உறைந்த பேழைக்குள்
இரண்டு நாட்கள் காத்திருந்தார்
*அயல் நாட்டிலிருந்து மகன் வந்து சேரும்வரை!*
-------------
*இளமைக்கே மவுசு!*
இளநீர் ஐம்பது ரூபாய்
தேங்காய் இருபது ரூபாய்
இளமைக்கே மவுசு!
---------------------
*கெமிஸ்ரியில் வெற்றி பெற!*
காம்பஸ் கைவசம் இருந்தும்
வட்டம் போட வாங்கினான்
அவளது வளையலை;
கணக்கு வகுப்பில்....
*கெமிஸ்ட்ரி வளர்க்க!*
--------------------
என்ன கவிதை எழுதினாலும் மொக்கை என்கிறாயே
உன்னையே கவிதை என்றால் என்ன சொல்வாய்?
----------------------
*மனித நேயம்*
பால்கனி மூலையில் உள்ள
குருவிக்கூட்டை கலைக்காமல்
ஒட்டடை அடித்தாள்
சண்டை போட்டு
தனிக்குடித்தனம் வந்த
மனைவி!
------------------
No comments:
Post a Comment