கல்வியா, செல்வமா, வீரமா?
இன்று(01/10/2025)
நவராத்திரியின் நவ( ஒன்பதாவது) நாள்.
சொல் தந்து , அதற்குப் பொருளும் தந்து, நம்வாழ்வினிலே, நம் வாக்கினிலே இனிமை அருளும் வாணியின் தினம்.
ஆகாசவாணி இப்போதெல்லாம்
அலைபேசி வடிவில், "கேட்டவர்க்கு கேட்டபடி" வழங்கும் வரமாக, "சித்திதாத்ரி"யாக.
பெண்சக்தி, அசுர சக்தியை ஒன்பது நாட்கள் வீரத்துடன் எதிர் கொண்டு போரிட்டு வென்று , பத்தாம்நாள் முழுமையாக,அழித்தது. எனவே அந்த ஒன்பது நாட்களுக்கு, சிறப்பு.
மலைமகள், அலைமகள், கலைமகள் என மூன்று மகள்களைப் போற்றிப் பரவும் இந்த நாட்களில் , நிலவும் தன் கலைகளை மெல்ல மெல்ல வளர்க்கிறது.
வீரம், செல்வம், கல்வி என மூன்று வாழ்வாதாரங்களின்,ஆதார சக்திகளாக மூன்று பெண் தெய்வங்கள்.
ஆனால் இச்சக்திகள் பெண் உருவமாக, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என மங்கல சொரூபமாக , கோலகலமாக, குதூகலமாக, கொண்டாடப்படுகின்றன.
மூன்றும் மாந்தர்க்குத்தேவைதான்.
இதில்உயர்வு ,தாழ்வு இல்லை.
இக்கொண்டாட்டத்தில், பரதமும், உண்டு, புரதமும் உண்டு. பரதம் சரி. அது என்ன புரதம்? விதவிதமான சுண்டல்கள்தான்!இன்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் புரத மேன்மையை நம் முன்னோர் விழாவில் இணைத்து, உடல்நலம் பேண, எளிமை வழி காட்டினர்.
இந்த ஒன்பது நாட்களுமே மகளிர் கூட்டங்கள் " கூடி இருந்து குளிரும் நாட்கள், தேவதைகளாக, வண்ண வண்ண ஆடைகளில்.
ஆனால் பாவாடை தாவணி " மிஸ்ஸிங்குங்க! எழுமூர் அருங் காட்சியகம் சென்று காண வேண்டும்!
வாய் பேசா பொம்மைகள் மக்களை ஒன்று சேர்க்கும் விந்தை விழா!
,
No comments:
Post a Comment