*27.9.25 சனிக்கிழமை மாலை நடந்த வாசிப்பு வட்ட அமர்வுகள் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்:*
27 செப்டம்பர் அன்று மாலை 5 மணிக்கு பெரியோருக்கான *வாசிப்பு வட்ட அமர்வு* துவங்கியது.
அமர்வில் கலந்து கொண்டோர்:
1. சாய் ராம்
2. தியாகராஜன்
3. ஶ்ரீவி
4. அமுதவல்லி
5. லக்ஷ்மி நாராயணன்
6. ஹரிஷ்
7. முஹம்மது சுலைமான்
8. சரஸ்வதி
9. ராம மூர்த்தி
10. லக்ஷ்மி
11. ஶ்ரீவித்யா
12. கணேசன்
13. வே. நாகராஜன்
14. சண்முக சுந்தரம்
15. சுப்பிரமணியன்
16. நாகராஜன் (அமுதவல்லி)
17. சுல்தானா
18. காமாட்சி
திரு. லட்சுமி நாராயணன் அவர்கள் *கி. ராஜ் நாராயணன் அவர்களின் கதவு* என்கின்ற சிறுகதையை வாசித்தார். சென்ற அமர்வில் *சுஜாதாவின் பேப்பரில் பேர்* என்னும் கதை வாசிக்கப்பட்ட போது, அரங்கத்தில் மகிழ்ச்சி இருந்ததைக் கண்டோம். கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் என்பதோடு, உற்சாகமாகவும் அதன் மீது விவாதம் நடத்தினர். இந்த முறை வாசிக்கப்பட்ட அந்தக் கதை கேட்போர் அனைவரின் மனங்களையும் உருக்கியது என்று சொன்னால் மிகையாகாது. பலரின் கண்கள் கசிந்தன. சோகம் அனைவரையும் ஆட்கொண்டது. சாதாரண அஃறினை பொருளான கதவினைக் கதாநாயகனாக்கி விளிம்பு நிலை குடும்பங்கள் வறுமையில் தத்தளிக்கும் நிலையையும், கரிசல் மண்ணின் பல்வேறு விஷயங்களையும் லாவகமாக திரு. கி. ரா. அவர்கள் தனது எழுத்தாற்றலால் வடித்திருக்கிறார். அனேகர் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை பார்க்க முடிந்தது. மிக அருமையான ஒரு கதை வாசிப்பு அது. திரு. லட்சுமி நாராயணனுக்கு நன்றி.
கதை வாசிப்பு முடிந்ததும் *திரு சண்முகசுந்தரம் ஐயா* *இலக்கண வகுப்பினை* நடத்தினார். *யாப்பிலக்கணம்* துவங்கப் பட்டது. கணித முறையிலான யாப்பிலக்கணத்தில் *அசை* பற்றி அவர் விளக்கியது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவிலே மிகச் சிறப்பாக இருந்தது. வகுப்பில் விளக்கிய கையோடு சில உதாரணங்களை கரும்பலகையில் எழுதி அதனை நம்மை அசை பிரிக்க சொன்ன விதம் அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. இலக்கணம் என்றாலே ஒவ்வாமை என்ற நிலையை மாற்றக்கூடிய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் பதில் அளித்த விதம் குறிப்பிடத் தகுந்தது. *நேர் அசை – நிரை அசை* இரண்டும் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்தன. ஒரு கடினமான பணியை இலகுவாக மாற்றி அனைவருக்கும் இலக்கணத்தின் மீது பிடிப்பு வரச் செய்த திரு சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.
அதன் பின்னர் சிறார்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு–2 சரியாக 6.30 மணிக்கு துவங்கியது.
பங்கேற்றவர்கள் விவரம்
1. செல்வன். ஸ்ரீநிகிதன்,
2. செல்வி. ஜனனி,
3. செல்வன். சாய்பிரணவ்,
4. செல்வன். அர்மான்,
5. செல்வி. அர்ஃபா,
6. செல்வன். ஆதவ்,
7. செல்வன். அவினாஷ்,
8. செல்வன். மதுசந்த்,
9. திரு. சாய்ராம்
10. திருமதி. மகாலட்சுமி
11. திரு. ஸ்ரீவெங்கடேஷ்
12. திருமதி. ராஜேஸ்வரி
13. திருமதி. ஷியாமளா
14. திருமதி. சுல்தானா
இம்முறை சிறுவர்களுக்கு சிறிய பட அட்டைக் கதைகள் வாசிக்க கொடுக்கப்பட்டன, வாசிப்பின் இறுதியில் நிகழ்ந்த வினாடி வினாவில், அனைவரும் சரியான விடையைக் கூறி, கரவொலி பெற்றனர். பின் *செல்வி ஜனனி,* தான் படித்த *கிச்சா பச்சா* கதையைத் தன் பாணியில் சுவைபட பகிர்ந்து கொண்டது, இந்த வாசிப்பு வட்டத்தின் குறிக்கோளை எட்டும் முதல் படியாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் சிறுவர்களுக்கான *தேன் சிட்டு மற்றும் ஊஞ்சல் நாளிதழ்களையும்,* சில கதைப் புத்தகங்களையும் பகிர்ந்து கொண்டார். குழந்தைகள் தாங்கள் செல்லும் போது, தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாசிக்க எடுத்து சென்றது மகிழ்வான தருணமாக அமைந்து.
அடுத்த அமர்வு வருகின்ற அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை 6.30மணிக்கு இன்னும் சில புதிய விஷயங்களுடன் அரங்கேறவுள்ளது. தொடர் வாசிப்பே சிறந்த கற்றலுக்கான வழி, குழந்தைகள் தொடர்ந்து இந்த முயற்சியில் பங்குகொள்ள பெற்றொர்களின் துணை நின்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திறம்பட இந்த அமர்வினை வழி நடத்திய திருமதி. மகாலட்சுமி அவர்களுக்கு நம் நன்றி.
இந்த வாசிப்பு வட்ட அமர்வும் இலக்கண வகுப்பு 2 மணி நேர மகிழ்வு தரும் அனுபவத்தை அள்ளிக் கொடுத்தன. கலந்து கொண்ட பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து சென்றது உற்சாகம் தருவதாக இருந்தது. ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றிகள்.
பொழுது போக்க மட்டுமல்ல நமது பார்வையை விசாலமாக்க அறிவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள நடக்கின்ற இந்த அமர்வுகளில் மேலும் பலர் கலந்து கொள்ள வேண்டும் என நமது சங்கம் விழைகிறது.
No comments:
Post a Comment