நற்சுனை- 1
*மெளனம்*
அமிழ்ந்துவிட்ட வார்த்தைகளா?
ஆழ்த்துவிட்ட தியானமா?
அடைந்துவிட்ட ஞானமா?
அடங்கிவிட்ட தேடலா?
அடக்கப்பட்ட நெஞ்சமா?
அசைக்கமுடியா இதழ்களா?(வாய்)
புதைந்து கொண்ட புன்னகையா?
புரிய வைக்க முயற்சியா?
விடை கேட்கும் புதிரா?
வெல்ல முடியா புரட்சியா?
பரம இரகசியம் பாதுகாக்க
பழகிக் கொண்ட பழக்கமா?
விரதமிருக்கும் வழக்கமா?
கடந்தகால வடுவா?
நிகழ்கால வலியா?
நிம்மதிக்காய் போட்டுக்கொண்ட
நீண்ட சொற்திரையா?
மோனமே நீ யார் என கேட்டேன்?
பதிலாய் வெறும் பெரும் அமைதி..
சமாதி நிலையாம் இதை
வெல்ல முடியுமா என் கவிதை ?
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment