Friday, August 8, 2025

உப்புமா கவிதை

 உப்புமா கவிதை-1



 *டோபர்மேனும்  டாபர் தேனும்* 

 

டாபர்(Dabur)நிறுவனத்தை

நிறுவிய இந்தியர் பெயர் பர்மன் . .

டோபர்மேன் ஞமலியை (Dobermann dog)உருவாக்கிய

டோபர்மேன் ஒரு ஜெர்மன்..


அறிவீரோ மக்களே..

ஒத்துப்போகுது ஒரு விஷயத்தில்

டோபர்மேனும் டாபர் தேனும்!

முதலில் நம்பவில்லை நானும்..

இரண்டுமே கலப்பாம்

கலப்படம் இல்லையாம்


சுந்தரவனம்(sundarbans)

நீலகிரி,இமாலய அடிவாரமெல்லாம்

சுற்றித் திரியும் தேனீக்கள்

உமிழ்ந்ததே டாபர் தேன்..

ஜெர்மன் க்ஷெப்பர்டு மற்றும் பல வகை  நாய்களின் தேர்தந்தெடுக்கப்பட்ட குணக்குவியலாய் பிறந்ததே டோபர்மேன்


டாபர் தேன் எதிர்க்கும் நோய்

டோபர்மேன் காக்கும் நாய்


டோபர்மேன் பலசாலி..

டாபர் தேன் விளம்பரத்தில் அக்க்ஷய் குமார்!!! பலசாலி!


டோபர்மேன் புத்திசாலி..

டாபர் தேன் குடித்தால் நானும் ஆகலாம் புத்திசாலி ..


டாபர் தேன் உடல் பருமன் குறைக்குமாம் ..

டோபர்மேன் மற்ற நாய்களை விட

அதிகம் குரைக்குமாம்..


டோபர்மேன் விசுவாசி..

டாபர் தேனுக்கு ஏற வேண்டாம் விலைவாசி!!!


யாருக்கேனும் தெரியுமா?

டாபர் பர்மன் டோபர்மேன் வளர்த்தாரா?

டோபர்மேன் டாபர் தேன் 

குடித்தாரா?


- சாய்கழல் சங்கீதா


********************

உப்புமா கவிதை 2


ரவை மட்டுமா?

சேமியா,அவல், சிறுதானியம், ப்ரெட் 

இவை கொண்டும்

கிண்டலாம் உப்புமா..

இவையெல்லாம் 

ஜவ்வரிசி போல உப்புமா?( swell)


உப்பில்லா உப்புமா சகிக்குமா?

உப்பு கூடினாலும் தப்புமா!

எண்ணெய் அதிகமானால் செரிக்குமா?

அவசர உதவிக்கு உப்புமா!

எண்ணக்கூடாது  மட்டமா!

உப்புமா இருக்க 

கவலை ஏனம்மா/ ஏனப்பா?


- சாய்கழல் சங்கீதா

****************

உப்புமா கவிதை என எதை சொல்வேன்?




ஆழ்ந்த கருத்தில்லை 

சிந்திவிட்ட சில சொற்கள் 

சிந்திக்க வைத்தால் நான் 

பொறுப்பில்லை ...

மனதைத் தொட வேண்டியதில்லை..

மரபையும் தொட 

வேண்டியதில்லை..

மரபுக்கு எதிரியில்லை..

மரபை மீறி விடும் 

சில கிண்டல் படைப்புகளுக்கு

கிண்டும் உப்புமா தவிர

மூளையில்

வேறு பெயர் தோன்றவில்லை..

படித்து நீங்கள் சின்னதாய்

ஒரு புன்முறுவல் பூத்தாலும் 

"உப்புமா வென்றது(வெந்தது)" என

அறிவிக்கலாம்.. தவறில்லை!





- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...