களேபரம்
----
இச்சொல்லைக் குழப்பம் என்ற பொருளில் நாம்பயன்படுத்துகிறோம்.
நான் நீண்ட காலம் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று சிலர் கருதுவதால் இச்சொல் எழுந்திருக்கலாம் என நினைத்தேன்.
ஆனால்
களப்பிரர்களுக்கும், களேபரத்துக்கும் தொடர்பு இல்லை.
களேபரத்துக்கு,உடம்பு, குழப்பம், பிணம் , எலும்பு என்ற பொரள கள உண்டு- இடத்துக்குத் தக்கவாறு பயன்படுத்தப்படும்.
தேவாரத்தில்"இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே" கன்று காணப்படுகிறது. இங்கு உடம்பு என்று பொருள்.
குமார சதகம் (18 ஆம் நூற்றாண்டு)-"களேபரம் சுடுபுகையில் நீசர்நிழலில்"
என்று கூறுகிறது. இங்கு பிணம் என்ற பொருளில்.
இன்றைய கால கட்டத்தில் குழப்பம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
ஆச்சரியப்படத் தேவையில்லை.
காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறுபடுவது வழுவல்ல, கால வகையினானே.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பிரமாதம் என்றால் தவறு, அபாயம், அலட்சியம் என்று பொருள்.இன்று பொருள்வேறு.
பழைய பொருளில்" சமையல் பிரமாதம்" என்று இன்று சொன்னால், பூரிக்கட்டையால் அடி விழாதா!
சமீபத்தில் படித்தது:
பெருந்தன்மைக்கு அகந்தை என்று ஒரு பொருளும் உண்டாம்!!!
- மோகன்
No comments:
Post a Comment