Monday, August 18, 2025

பற்பசை

 உப்புமா கவிதை 4


பற்பசை


பளபள பற்கள்

கலகல  சிரிப்பு

பற்பசை கொண்டே

காலை கண் விழிப்பு


கோபால் பற்பொடி முதல் 

கோல்கேட் பற்பசை வரை..

எத்தனை விளம்பரம் !

உனக்கேன் ஆடம்பரம்?


கரடி, முயல் எல்லாம்

பல் விளக்குமோ?

சுட்டிகளின் சுவையான

பற்பசைக்கு விளம்பரமோ?


பாம்பு கடித்த பின்விளைவாய்

நுரை தள்ளும் வாயில்..

குழாய் பிதுக்க பாம்பாய் வந்து

நுரைத்திடுவாய் வாயில் 


புதினா  கரித்தூள் உப்பு

சோப்பு ஃபுளுரைடு கிராம்பு

பலமான பற்களுக்கே  இத்தனையும்

குழாய்க்குள் அடைந்த அத்தனையும்


பரபரப்பான காலை வேளை

பல் துடைப்பம் மேல் வைப்பாய் உன் காலை ..

பரபர என்று பார்ப்பாய் வேலை 

மீண்டும் ஒரு முறை தூங்கப்

போகும் வேளை


கறைகள் போகத் துடைப்பாய்..

பற்கள் ஆகும் வெளுப்பாய்

கிருமிகள் எல்லாம் மாயும்..

எல்லாம் நீ செய்த மாயம்..


பற்சொத்தை தடுப்பாய்

பல் சொத்தை காப்பாய்!

மின்னும் வெள்ளைப் 

பற்கள் உன்னாலே..

கண்கள் கூசுது

வாய் திறந்தாலே!


பரிதவிக்க வைக்கும் 

பற்கூச்சம்..

பற்பசை இருக்க

ஏன் அச்சம்?


எங்கள் பற்கள் உன் வசம்

கை குவித்து  பிடிக்கிறோம்

உன் வாசம் 

"ஹா ஹா" எங்கள் சுவாசம்!!!

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!

பற்பசையும் தருதுங்க வாக்குறுதி!!!


- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...