ஒரே கவிதை...
நற்சுனையாகவும்
உப்புமாவாகவும்
நற்சுனை 7
நெகிழ்
கலவைச் சேவு(மிக்ஸர்)
வாங்கி வந்தார் அப்பா..
வியாழக்கிழமை மட்டும்
கோவிந்தன் கடையில் கிட்டும்
நீண்ட வரிசை...அப்பப்பா
நீட்டிச் சொன்னார் அப்பா
விரும்பித் திறந்தேன்!
விரைவில் அறிந்தேன்!
நமத்துப் போன கலவைச் சேவு..
ஆவல் தொலைந்தது ஆற்றில்
அவல் நனைந்ததோ காற்றில்?
கலவைச் சேவு கவரவில்லை பின்பு..
நெகிழ வைத்ததோ கலவையில் கலந்த அன்பு!
நெகிழிப் பையின் எடை
குறைந்து
காற்றடைத்த காயப் பையின்
எடை கூடியது!
- சாய்கழல் சங்கீதா
உப்புமா 5
பொட்டலம்
கலவைச் சேவு(மிக்ஸர்) பொட்டலம்
வாங்கி வந்தார் அப்பா
வியாழக் கிழமை மட்டுமே
கோவிந்தன் கடையில் கிட்டுமே
கூட்டமோ களை கட்டுமே
தாமதமாய் போனால் காராசேவு மட்டுமே
அனுமார் வாலாய் வரிசை நீளம்
கடைசி ஆளாய் நின்றேன் நானும்
அங்கலாய்த்தார் அப்பா..
அப்படியாப்பா....?..இழுத்தேன் நான்..
விரைவாய் பொட்டலம்
பிடித்தேன் பிரித்தேன்
தின்றேன் அறிந்தேன்
நமத்துப் போன கலவை சேவு!
சரியாக பொறியவில்லையோ கடலை மாவு??
இதற்கா அவ்வளவு பெரிய க்யூவு?(வரிசை)
நா நச்சரித்து கேட்டது
மொறு மொறு ருசி ..
நமத்ததை உண்ண வைத்தது தூண்டப்பட்ட பசி..
வேகமாய் குறைந்தது பொட்டலத்தின் எடை!
வயிறு நிறைத்தது
கோவிந்தன் கடை!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment