நற்சுனை-4
கோலங்கள்
இளம் மஞ்சளுக்குள் ஊதா ஊடுருவிய வானம்!
சில கணங்கள் இரசித்துப்
பார்த்தேன் நானும்..
என்றோ ஒரு நாள்
என் விழிகள் நின்று காணும்
இயற்கையின் வண்ணக் கோலங்கள்
இரசிக்கப்படாமலே
களைந்து போகின்றன
பல நாளும்...
நின்று இரசிக்க வேண்டும்
சில நிமிடங்களேனும்
ஒவ்வொரு நாளும்..
அந்த நிமிடங்களுக்குள்
எங்கிருந்தோ
ஒரு கவிதை மனதை
வருடிப் பாடும்
புதுக் கவிதையொன்று மன வாசலில் நின்று தேடும்
கனரக வாகனங்களின்
ஒவ்வொரு கூச்சலிலும்
ஆசையாய் வந்த கவிதை அஞ்சும் கெஞ்சும்
கோலத்தின் புள்ளிகளே
மிஞ்சும்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment