79 ஆவது சுதந்திர
தினம்
🌺🌺🌺🌺🌺🌺
இன்று 79 ஆவது சுதந்திர தினம்.
அடுத்த வருடம் பாரத அன்னைக்கு அகவை எண்பது.சதாபிஷேகம் -ஆயிரம் பிறைகளை காணும் பாரத அன்னை நமக்கு, அருள் புரியும் தருணம்.
எழுபத்து ஒன்பதோ , எண்பதோ, நரை, திரை, மூப்பு இன்றி, என்றும்,
சீர்இளமைத்திறம் கண்டு உலகை வியக்க வைக்கும் அவளுக்கு,
அவள்தம் சிறார் கூட்டத்தின் நல் வாழ்த்துகள்🌺
"வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான்" என்ற அடிமை சிந்தனையை விரட்டி ஓட்டி இன்று ""வெள்ளைக்காரன்தான் "பொய்யிலேபிறந்து, பொய்யிலே வளர்ந்து " பொய்பேசித் திரிகிறான் என்ற கதையை ,உலகுக்கே பறை சாற்றும் சுதந்திரம் பெற்றோம்.
" ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வோம்
இந்த நாட்டிலே" என்றான்பாரதி.
குள்ள நரிப் பகைவர்களின் பின் முதுகு சூதை முறியடித்த
நம் சேனை வீராங்கனைகள் ,
நம் குலப்பெண்டிரின் "சிந்தூரம்"
காத்த " நிமிர்ந்த நடையினர்", பீடு நடை போடும் சுதந்திர இந்தியா இன்று.
" காசி நகர்ப் புலவர் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்றான்.
இன்று கேட்பதென்ன, பார்க்கவும்,செய்கிறோம், உலக நடப்புகளை, தொலை இயக்கிகளை வைத்து வீட்டில்அமர்ந்தபடி. பணப் பரிமாற்றத்தில்,மூக்கில்விரல் வைத்து வியக்க வைக்கும் இந்திய தொழில் நுட்பம் எனப் பலப் பல முன்னேற்றங்கள்.
பண்டமாற்று முறையைப்போற்றினான்," சிந்து நதியின் மிசை" பாட்டினிலே.
இன்று ஏகாதிபத்திய வெறியர்
கட்டுக்கட்டாக வரி விதித்து, நமது " திரை கடலோடி திரவியம்" தேடும் நமது வணிகப் பெருமக்களுக்கு,
இக்கட்டான முட்டுக்கட்டைகள் போட்டாலும், பாரதி காட்டிய பண்டமாற்று முறை வழி காட்டுகிறதே!
உருசிய எரி எண்ணெயை வாங்கி சீன யுவானில் பணம் செலுத்துவோம்.
நாட்டின்இறையாணமையை பேரம்பேச விடோம்.
சுதந்திர நாட்டில் பல குறைகள் இருந்தாலும், நிறை போற்றி, குறை திருத்த முயலுவோம்.
" ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம்; நாம்சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ!"
நாம் யாவரும்
" இந்நாட்டு மன்னர் ". என 15 ஆகஸ்ட் 1947, உலகுக்கு பறை சாற்றியது. 2025ல் அதே நாளை நமக்குப் பரிசாகத்தந்த தியாகச்செம்மல்களைப் போற்றி, நன்றியுடன் நினைவு கூறுவோம்.
ஜெயபேரிகை கொட்டி, வரிச்சங்கம் நின்றூதி ,இந்நாளைக் கொண்டாடுவோம்.
மீண்டும் மீண்டும் இந்நாள் ஆண்டு தோறும் வருகையில்,
நம்நாடு மேலும் மேலும் உச்சம்தொட, நமது மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்க, வாழ்த்துவோம்.
🙏🙏🌺🌺
No comments:
Post a Comment