Monday, August 11, 2025

அசை போடுதலும் செம்மையாக்கலும்

 அசை போடுதலும்

செம்மையாக்கலும்

--------

ஶ்ரீவித்யா அவர்கள் இன்றைய பதிவில் அசை போடுதல் பற்றிக் குறிப்பிட்டார்கள். 

நேற்று கூடுகையில் திரு எஸ் . பி. முத்துராமன் அவர்களைப்பற்றியும் பேசப்பட்டது.


இரண்டையும் இணைத்துப் பார்த்து அசை போட்டதின் விளைவு  இந்த பதிவு:


அசை போடுதல் இரண்டு வகைப்படும்-விலங்குகள் அசை போடுதல், மக்கள் நினைவுகளை அசை போடுதல்.


அசை போடுதல் , மாடு போன்ற விலங்குகள் , முதலில் உணவை விழுங்கி விட்டு, பின்பு சாவகாசமாக , வாய்க்கு கொணர்ந்து , மென்று தின்பதைக் குறிக்கும். அவைகளின் செரிமானத்துக்கு உதவும்.


மனித மனப் பெட்டகத்தில் பல நினைவுகள் பூட்டிக் கிடக்கின்றன.- இனியவை மற்றும் கவலை அல்லது மனவலியைத் தரக்கூடியவை.

நல்ல நினைவுகளை அசை போடுவதில் ஒரு சுகம், கண் மூடி, மௌனமாக, தனக்குத்தானே இரசிக்கும் சுகம்.


 திரு எஸ் பி  முத்துராமன் அவர்கள்,எளிய நிலையிலிருந்து உழைத்தே , வாழ்வில் உயர்ந்தவர். ஏனெனில் அவர் முதலில் வேலை கற்றதே " செம்மையாக்கல்" ( editing) துறையில்தான்!


வேண்டுவதை வைத்துக்கொண்டு , அல்லவற்றை வெட்டி எறிவதுதானே இத்துறையின்பணி. 


அவர்வாழ்விலும் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து உயர நிச்சயம் உதவி இருக்கும்.


அதனால் அவர் வாழ்வில் நல்ல நினைவுகள் நிறைய இருக்கும். ஐயா அவர்களும் நெடு நேரம் நின்றுகொண்டே ( வயது ஒரு பொருட்டா இவர்க்கு!) நினவுகளை அசை போட்டவாறே, நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

நாம் செய்த நல்வினையின் பேறு.

🙏🙏



- இ.ச.மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...