நற்சுனை-2
அறிவியலா ?ஆன்மீகமா?
பிறப்பும் இறப்பும்
யாதென கண்ணனிடம் கேட்டேன்
பிறந்து இறந்து பார்
கண்ணதாசன் சொன்னான்..
வினவியது உன்னிடம்..
விடை கிடைப்பதேன் அவனிடம்?
சுவிட்ச் போடுகிறாய் இங்கே
மின்விளக்கு எரிகிறதே அங்கே
என்றான்..
அவன் தான் நான்
நீ தான் அவன்
நான் தான் நீ...
குன்றெடுத்தான் அன்று
குழப்பிவிட்டான் இன்று
மனதைக் குழைந்தது குழப்பம்..
இதுவா உன் விருப்பம்?
குழப்பிவிட்டவனிடம்
குழப்பத்தோடு நான்..
அவன் என்னைப் படித்தான்..
நீ அவனைப் படித்தாய்..
நான் உன்னைப் பிடிப்பேன் என்றான்
ஆன்மீகமா?? கேட்டேன்..
ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு
ஆற்றலைக் கடத்தும் அறிவியலும் தான்...
காற்றின் ஆற்றலை
மின்னாற்றலாய்
மாற்றுதே காற்றாலை..
சிரித்தான்..மறைந்தான்..
சிந்திக்க வைத்தது
அவன் சிரிப்பலை!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment