தமிழ்ப் பழமொழிகள்.
------
தமிழ் பழ மொழிகள் பழைய மொழிகள் அல்ல.
பழம் பெரும் மொழிகள்.
பழம் போல் இனிக்கும்மொழிகள்.
வட்டார வழக்கை ஒட்டி எழுந்த மொழிகள்.
நம் மண்ணின்மணம் கமழும் மொழிகள்.
நம் பண்பாட்டின் வேர்கள்.
நமது தஞ்சை, இராமநாதபுரம், சிவகெங்கைபோன்ற மாவட்டங்களில் பழமொழி சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுவதைக் காணலாம்
காலப்போக்கில் , பல சிதைந்து வேறு பொருளைத்தந்தாலும், நன்கு ஆய்ந்தால், மெய்ப்பொருள்
விளங்கும்.
உதாரணம்:
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.
தப்பு தப்பு.
அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்!
சமீபத்தில் கண்ட ஒரு சுவாரஸ்யமான பழமொழி:
மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும், முடிச்சு போட்டாற் போல.
ஒரு கதை இந்த பழமொழி உருவானதை விவரிக்கிறது.
நாட்டை ஆண்ட அரசனுக்கு, முழங்காலில் வலி. அரசவை வைத்தியர் பொடுதலை என்னும்மூலிகையை வைத்துக்கட்டினால் சரியாகி விடும், என்று கூறிவிட்டு, அதைக்கொணர வெளியே சென்றார்.
அரசனுக்கு அவசரம். அரசனிடம் நல்ல பெயர் வாங்க நினைத்த ஓர் அவசரக்குடுக்கை அமைச்சர்(!நமக்குப் புதிது அல்ல!) பொடுதலை என்றால் மொட்டைத்தலை என்று கருதி, ஒரு மொட்டைத்தலையனைப்பிடித்து, அரசவைக்குக் கொணர்ந்தார். மொட்டைத்தலைக்கும் அரசன் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பரிட்சை எழுதாமலே மூத்த அமைச்சராகப் பதவி உயர்வு பெறலாம் என மனக்கோட்டை கட்டினார்.
மொட்டைத்தலையிலும் பயம் காரணமாக வியர்வைத்துளிகள்!
அவன் முன்னோர் செய்த நற்காரியங்களின் பலன், வைத்தியர் வந்து விட்டார், பொடுதலையைக்கையில் பிடித்தவாறு.
பிறகென்ன?
மொட்டைத்தலை , தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று பிடித்தான் ஓட்டம்!
நமக்கோ ஒரு பழமொழி கிடைத்தது,
-இ.ச.மோகன்
சம்பந்தம்,இல்லாமல் இரண்டு விடயங்களை இணைப்பதைக்குறிக்க.
No comments:
Post a Comment