நற்சுனை 5
நான்/தான்
என்னை விட்டு
தொலைந்து கொண்டே இருக்கிறது
உறவு
பறந்து கொண்டே இருக்கிறது
பாசம்
நகர்ந்து கொண்டே செல்கிறது
நட்பு
அமிழ்ந்து கொண்டே இருக்கிறது அன்பு
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
விலக விலக விழியும் தொலைக்கும்
எடுப்பதற்கே ஆசை உண்டு எல்லோர்க்கும்!
எண்ணம் உண்டா எடுக்க நினைப்பதை கொடுப்பதற்கும்???
"நான்" என்பது விலகினால்..
உயிராய் உறவாடுமே உறவு
பயிராய் செழிக்குமே பாசம்
நாடிப் பாராட்டுமே நட்பு
அள்ளக் கிடைக்குமே அன்பு
அழிக்க வேண்டியது
"நான்" என்ற கர்வமே..
"தான்" என்ற தன்மானமும்
தற்காக்க வேண்டுமே!
நீர்த்துளியாய் தாமரை இலை மேல்
ஒட்டியும் ஒட்டாமல் இருப்பதே மேல்..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment