★★★★★★★★★
*சுதந்திர தின*
*நல்வாழ்த்துகள்*
★★★★★★★★★
வியாபாரம் செய்ய வந்த
ஈனர் கூட்டம்
அவர்தம் பிரித்தாளும்
சூழ்ச்சியிலே வீழ்ந்திட்ட
வீணர் கூட்டம்.
அதனாலே அடிமைப் பட்டோம்.
ஆணவ ஆங்கிலேயரிடம்
அடி பணிந்தோம்.
பாரதத் தாயின் அடிமை
விலங்கொடிக்கப் புறப்பட்ட
வீரர்கள் படை
தன்னுயிர் ஈந்து,
குருதி சிந்தி
போராடிய
வீர வீராங்கனைகள்
எண்ணற்றோர் இருந்தனரே!
★ பதின்ம வயதில் வருகின்ற
மண வாழ்வுக் கனவுகள்
ஏதுமின்றி
சமூகப் பார்வை
கொண்டிருந்தவள்..
மகாத்மாவிற்கே அரசியல்
ஆர்வம் வரச் செய்தவள்...
*தில்லையாடி வள்ளியம்மை..*
பதினாறு வயதிலே உயிர் நீத்தாள்.
விடுதலை வேட்கையை
உயிர் போல் காத்தாள்.
★ சிவகங்கைச் சீமையிலே
வெள்ளையருக்கு எதிராக
போராடிய வீரமங்கை
புரவியிலே பவனிவந்து
ஆங்கிலேயரை அலற வைத்த
*வீரப் பெண்மணி தீரமிகு வேலு நாச்சியார்*
சுதந்திர வேட்கை விதையை
முதலில் விதைத்தாள்.
★ தத்துப் பிள்ளைக்கு
அரசாள உரிமையிலை
என சதி செய்த ஆங்கிலேயருக்கு
எதிராக களம் கண்டாள்
*ஜான்ஸி ராணி லட்சுமிபாய்.*
சுதந்திரக் கனலை
ஊட்டி வளர்த்தாள்.
★ கொடுங்கோன்மை ஆட்சியரை
கிஞ்சித்தும் அச்சமின்றி
போராடி அலற வைத்த
வீரயுக நாயகி
*கோவில்பட்டி 'வீர'லட்சுமி*
விடுதலைத் தீயை
வளர்த்தெடுத்தாள்.
★ உடன் பிறப்பே
துரோகம் செய்ய
ஆங்கிலேய அரசினாலே
தூக்கு மேடை ஏகிய
*வீரபாண்டியக் கட்டபொம்மன்*
விடுதலைப் போரை
வீரியமாய் முன்னெடுத்தான்.
★ ஆங்கிலேய அரசுக்கு
சிம்ம சொப்பனமாய் விளங்கிய
"பாரத சிங்கங்கள்"
*லால்(LAL) - பால்(PAL) பால்(BAL)*
எனும் மும்மூர்த்திகள்
*லாலா லஜபதி ராய். விபின்சந்த்ர பால், பால கங்காதர திலகர்*
சுதந்திரப் போரை
தீவிரப் படுத்தினர்.
★ வியாபாரம் செய்ய வந்து
ஆட்சி பிடித்த கயவருக்கு
வியாபாரத்தாலே பதில் சொல்ல
கீழைக் கடலில் கப்பலோட்டினான்
எங்கள் வீரமிகு *வ.உ.சி.*
வெள்ளையருக்கு அச்சமூட்டினான்.
★ தனது அஞ்சாத செயல்பாட்டால்
ஆங்கிலேயரை அதிர வைத்த
இளைய சிங்கம் *சந்த்ரசேகர ஆசாத்*
விடுதலைத் தீயில் எண்ணை வார்த்தான்.
கொடுங்கோன்மை ஜாலியன் வாலாபாக்
கொடுமைக்கு பழிவாங்க
ஆண்டுகள் பல காத்திருந்து
பழி வாங்கி வெஞ்சினம் தீர்த்தான்
*உத்தம் சிங்* எனும்
இளைஞன் ஒருவன்
★ இளைய பருவமாய் இருந்தாலும்
நாட்டுப் பற்று மேலோங்க
அரசின் ஆணிவேரையே
அசைத்திட்ட இன்னும் மூவர்
எங்கள் பெருமைக்குரிய
*பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ்* ஆவர்.
திமிர் பிடித்த ஆட்சியரை
அச்சமுற வைத்த
இணையற்ற போராளிகள்
தூக்கிலே ஏறிய போதும்
இன்குலாப் முழக்கமிட்டு
விடுதலைப் போருக்கு
புது வடிவம் தந்தனரே!
★ அக்கினிக் குண்டுகளாய்
ஒவ்வொரு வார்த்தையும்
சீறிப் பாய்ந்து சினமூட்ட
தன் கவிதைகளாலே
ஆங்கில அரசின்
அஸ்திவாரத்தை அசைத்திட்டானே
முண்டாசுக் கவிஞன் *பாரதி..*
சுதந்திர வேட்கையை
காட்டுத் தீயாய் பரவச் செய்தான்!
அவனுடன் தோளுடன் தோள் நின்று களம் ஆடினார் *சுப்ரமணியம் சிவா..*
சுதந்திரப் போரில் பங்கேற்று
தடியடி பட்டு சிறை சென்று
வாழ்வையே அர்ப்பணித்த
தகைசால் தமிழர் இருவரையும்
கண் முன்னுள்ள இரு தோழரையும்
வணங்கி நாமும் மகிழ்ந்திடுவோம்
பற் பலரும் போராடி
செந்நீர் சிந்தி உயிர் நீத்து
தூக்குக் கயிற்றை முத்தமிட்டு
பாடுபட்டு பெற்றிட்ட
பெருமை மிகு சுதந்திரத்தை
இதயங் குளிர போற்றிடுவோம்
வியாபாரப் போர்வையிலே
கார்ப்பொரேட் கயவரிடம்
மீண்டும் நாடு அடிமையாகும்
ஆபத்து சூழ்ந்த வேளையிலே
வருமுன் காப்போம் தோழர்களே!
சுதந்திரத்தைப் பாதுகாப்போம்!
அணிதிரளுங்கள் இந்தியரே!!
இந்திய நாட்டை அடிமைப் படுத்தி
கோலோச்சி ஆட்சி செய்த
வெள்ளையரையேத் தோற்கடிக்கும்
கொள்ளையரை முறியடிப்போம்
வாழ்க பாரதம்..!
வளர்க சுதந்திரம்..!!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment