Friday, August 15, 2025

சுதந்திரம் எப்போதோ?

 சுதந்திரம் எப்போதோ? 

    

மனித மிருகங்களிடம் அடைப்பட்டு கிடக்கும்

மிருகங்களுக்கு சுதந்திரம்  எப்போது?? 


இணையத்தில்

 அடிமைப்பட்டு கிடக்கும் இளையோருக்கு

சுதந்திரம் எப்போது?? 


செயற்கையில் சிக்கி தவிக்கும் இயற்கைக்கு

சுதந்திரம் எப்போது?? 


புட்டிகளில் அடைப்பட்டு

தவிக்கும் குடிநீருக்கு

சுதந்திரம் எப்போது??  


பூட்டிய பெட்டிக்குள் தவிக்கும் பணத்திற்கு

விடுதலை எப்போது?? 


பொய்மையில்  கட்டுண்டு கிடக்கும்

மெய்மைக்கு விடுதலை 

எப்போது??? 


பலமொழி கலப்பில் பரிதவிக்கும் எம் தமிழன்னைக்கு

விடுதலை எப்போதோ?? 


என்று தீருமோ இச் சுதந்திர தாகம்?? 


உண்மை சுதந்திரம் எப்போதோ? 

உயிர் உடலை பிரியும்

வேளையிலோ???



- வித்யா



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...