Thursday, August 14, 2025

....உள்ள வரை காதல் வாழும்

 .......உள்ள வரை காதல் வாழும் 


அலை தானென்பாள் கடல் அவன் என்பாள் 

   "அனாவசியம் ஈருடல் ஓர் உயிருக்கு" என்பார் 


தலை வைத்துக் காதலைக் கொண்டாடுவார்

   தரணியில் வேறெது இதற்கிணை? கேட்பார் 


பல ஆண்டு கழிய பிள்ளைக்குக் காதல் தொற்று 

   "பார்த்து பார்த்து வளர்த்தோமே எல்லாம் விழலுக்கு"


கலையாம் காதலது எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை 

   கத்தரிக்காய் உள்ள வரை காதல் வாழும் ஐயமில்லை.


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/8/2025

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...