Thursday, August 14, 2025

வாழைக்காய் பஜ்ஜி

 உப்புமா கவிதை-3


வாழைக்காய் பஜ்ஜி


பஜ்ஜியாகி பசியாற்றவே

பாருக்குள் நீ காய்த்தாய்!

பச்சை பட்டுடுத்தி பார்ப்போர் கண்களை நிறைத்தாய்!


பழுப்பதற்கு முன் நீ  வாட்டசாட்ட வாழைக்காய்!

வெட்ட வெட்ட

நீளத்தில் குறைந்தாய்

ஏழெட்டாய் மெலிந்தாய்..


கடலைமாவில் "தோய்க்க

தோய்க்க" முழுசாய் நீயும் நனைந்தாய்!

எண்ணெய்க் கிணற்றில் நீந்தவா நீ குதித்தாய்?

திரும்பித் திரும்பி மிதந்தாய்  

பொறிந்தாய் சிவந்தாய்


பல காய்களை பின்னுக்குத் தள்ளி

பஜ்ஜியில் நீயே வென்றாய்..


தேநீர் குழம்பியுடன்

சுடச்சுட பிறந்தாய் 

மழைக் காலத்தில் 

மாலை நேர விருந்தாய்..


நீ இருக்க திடீர்

விருந்தாளிக்கு

அஞ்ச மாட்டாள்

என் தாய்..


பெண் பார்க்கும் 

படலத்தில் பத்து சவரனாவது குறைத்தாய்!?? 


சட்னியுடனே சிறந்தாய்

சாம்பார் குருமா மறுத்தாய்

தட்டுக்குத் தாவியவுடனே

ஏவுகணையாய் வாய்க்குள் பறந்தாய் 

நிலையற்ற வாழ்வு என உரைத்து மறைந்தாய்..


யாக்கையை பலூன் என்றா நினைத்தாய்?

ஆயினும் இருப்பாய் ஊட்டச்சத்து மருந்தாய்!


- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...