Monday, August 4, 2025

பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)

 பனிக்கூழ்

(ஐஸ்கிரீம்)




கண்டவுடன் மனதை உருக  வைக்கிறாய்..

காலம் தாழ்த்தினால் 

உருகிப் போகிறாய்..

குச்சியில்(குச்சி ஐஸ்) உன்னைப் பார்த்தால் குதிக்க வைக்கிறாய்..

பந்தில் பறந்து வந்து

பிடிக்க வைக்கிறாய்..

கோப்பையிலும்(cup) நீ குடியிருக்கிறாய்..

கண்ட கண்ட சாயம் பூசி

பெயரை மாற்றி மாற்றி

ஏமாற்றி வருகிறாய்..

ஏமாறினாலும் குளுமை சுவைக்கு ஏங்க வைக்கிறாய்..

வெப்பத்தை மொத்தமாய்

எங்கோ விற்கிறாய்..🤔

வாயில் வைத்தவுடன் கரைந்து போகிறாய்..

விரைந்து உண்ணாவிட்டால்

கரைந்து கரைந்து

குடிக்க) வைக்கிறாய்... 

கூம்பிலும்(cone) குச்சியிலும்

ஏன் அழுது வடிகிறாய்?


- சாய்கழல் சங்கீதா


************

*பனிக்கூழ்*

*நான் முதலில் பாலாக பிறந்தேன்…*

அப்போது கொதிக்க வைத்தீர்கள்…

என் சுவையைக் காண, என் சக்தியைக் காண,

சூடாக்கி சோதித்தீர்கள்…

தாங்கிக்கொண்டேன்…

எப்படியும் ஒரு நாள் நீர் என்னை அன்புடன் அணைக்க வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்…


ஆனால், அதற்குப் பிறகும் என்னை குளிரேற்றி,


பணிக்கட்டியாக உறைய வைத்தீர்கள்…

சூட்டிலும்,  கடும் குளிரிலும் சோதனையை எதிர்கொண்டேன்…

உரைந்தேன்…

செய்வதறியாமல், என் உடம்பே உருக ஆரம்பித்தது…


அதற்குப் பிறகும்,

நீங்கள் என்னை விடவே இல்லை…

கரைந்து போன என்னையும்

வாயில் போட்டு சுவைக்க முற்பட்டீர்கள்…

உங்களது ஆசையைக் குளிர்விக்க நான் என்னுடைய கடைசி துளி வரை வழங்கிக் கொண்டே இருந்தேன்…


நான் சொல்கிறேன்…

ஒரு நாள் உங்களுக்கும் இதே நிலை வரும்,

உங்கள் உணர்வுகளும் இவ்வாறே உருகும்,

உங்களது அகந்தையும் என் போல் கரைந்து போகும் என்று…

ஆனால்…

நீங்கள் உணரவே இல்லை…


நான் என்ன செய்ய!”

- ,தியாகராஜன்

*********************

பனிக்கூழ் ஆய்வு


பனியாம், கூழாம் ஏதோ அகழாய்வாம் 

   பாரதி நம் தமிழ்ச் சங்கத்தில் தானாம்


வனிதை ஒருவரே தொடங்கி வைத்தது 

   வரேன் நானுமென "மழலை"யும் வந்தது 


தனியாக வேண்டாமென "ராசா"வும் சேர்ந்தார் 

   தன்னிடமுள வண்ணப் படமும் பகிர்ந்தார் 


முனிவராம் துணைத் தலைவர் வந்தார் முன்னே

   முடியும் தன்னாலுமெனத் தலைவரும் பின்னே


"சனி, ஞாயிறில் இது தொடங்கி இருக்கணும்" 

   சற்றும் எதிர்பாராது நம் நிதிச் செயலரும்


" கனியாம் தமிழ்ச் சங்கத்தில் பனிக்கூழுமா?

   கடப்பாரை, மண்வெட்டி இன்னும் வேணுமா?"


எனக்குள் சொன்னது பட்சி "போதும் போதும்"

   இதற்கு மேல் தோண்டினால் வருமாம் பூதம் 


மனிதா ! உன் ஆசைக்கு இன்னொரு பெயரா?

   மறைமுகமாயதை ஆராய்ச்சி என்கிறாயா?


__. குத்தனூர் சேஷுதாஸ் 4/8/2025

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...