(நற்சுனைக்குள்) உப்புமா
போகாதே!
ஒரு வருடம் பிரித்து வைத்ததே விதி
வில்லத்தனமாய் விதி செய்த சதி..
பிரிந்திருந்தாலும்
ஒவ்வொரு கணமும் உன்னையே
நினைத்திருப்பேன் நான்..
நீயே என் பொழுதுகளின்
கணங்களை ஆளும் பதி!
உனையன்றி எனக்கேது
வேறு கதி??
என் புலம்பலை புரிந்து கொள்ள
யாருக்கு உண்டு மதி?
ஆண்டொன்று கழிந்து
அயல் நாட்டிலிருந்து
நேற்று தானே
எலிகாப்டரில் வந்தாய்!
ஆக்கிப் போட்டதையெல்லாம்
ஆசையாய் ஒரு நாளே
நீ உண்டாய்..
மறுநாளே கிளம்புவது என்ன நியாயம்?
வெள்ளி சனி
ஓடி விடும் மாயம்
ஞாயிறன்று கிளம்பினால்
சற்றே ஆறலாம் என் காயம்..
அதற்கடுத்த 360 நாட்கள்
விரைந்தா ஓயும்?
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment