உப்புமா 6
சர்க்கஸ்காரியாய் நான்!
வெயில் மழையில் குடை பிடிப்போம் நாங்கள்
வீட்டுக்குள்ளேயும் குடை பிடிப்பீர் நீங்கள்
உட்கார்ந்த இடத்தை விட்டு நகரவே மாட்டீர்
ஒரு வேலையும் ஒத்தாசையாய்
செய்ய மாட்டீர்
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சர்க்கஸ்காரியாய் நான்..
காலாட்டிக் கொண்டு தும்பிகளை துரத்துவது போல் கையாட்டிக் கொண்டு நீங்கள்..
"மண்டைக்குள் என்ன களிமண்ணா வச்சிருக்க?"
திட்டுவார் என் ஆசிரியர்..
உங்களை இப்படி கேட்க முடியுமா?
கேட்பவர் அறிவில்லாத சிறியர்
நாங்கள் பிடித்துப் படிப்பது பாரதியை..
பிடிக்க முடியாது உங்கள் சாரதியை..
நேற்று உங்கள் பிறந்தநாள்!
புலனத்தில் மூழ்காமல்
உங்கள் சாரதிக்கும் சேர்த்து
அக்கறையாய் செய்து
கொடுத்தேனே கொழுக்கட்டை
வடை சுண்டல்...
கோபித்துக் கொள்ளாமல் பொறுப்பீரே ஆசையாய் நான் செய்யும் கிண்டல்...
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment