மயிலிறகுக் காதல்
மயிலிறகாம் ஆண் மகனின் காதல் என்பார்
மடமையாம் குட்டி போடத் தீனி போடுவார்
உயிரையும் இக் கூட்டம் காதலுக்குத் தரும்
ஓயாமல் கடலலையாய் முயலும் நாளும்
அயிரை மீன் பெண்ணென அறியாது பாவம்
அதைப் பிடிக்கும் முயற்சியில் தாடியே நீளும்
பயிராம் காதல் செழிக்க என்னதானாம் உரம்?
பணம், கார், பங்களா இவையே பெரும்பாலும்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 2/8/2025
*************
No comments:
Post a Comment