அமரர், அசுரர்கள் அந்நாள் தேடிய அமுதம்
அலையாமல் கிடைக்கும் அன்னை மூலம்
குமுதமாம் குழந்தையின் வாய் நெகிழ வைக்கும்
குளிர் நிலவாம் தாயும், அவளின் பாலும்
அமுதமாம் அப் பால் மனிதனுக்கும், விலங்குக்கும்
ஆனால் தொடர்ந்து தரும் விலங்குகள் மட்டும்
சுமப்பதும் கருவில், வளர்ப்பதும் தாயாம்
சுரக்கும் அமுதம் தருவதும் கடமையாம்
சமைக்க, சாப்பிடவும் தான் ஆண்களால் முடியும்
சரியே ! பெண்மைக்குத் தரப் பட்ட பொறுப்பும்
இமைகளாய்க் குழந்தையைக் காப்பவரும் இவரே
இதனாலே பாரதியும் போற்றிப் புகழ்ந்தானே
சமமாம் ஆணும், பெண்ணும் என்பது வாதம்
சதியாம் தாய்மை பெண்ணுக்கே தந்ததும்
குமுற வைக்கும் இந்நாள் உண்மையும் உண்டாம்
குழந்தைக்குத் தாய்ப்பால் மறுக்கப் படுகிறதாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 1/8/2025
No comments:
Post a Comment