*நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் மணிமகுடத்தில் இன்னும் ஒரு வைரம். வெற்றி வாகை சூடிய இரண்டாம் ஆண்டு விழா விவரணம்*
27 ஜூலை 2025 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக ஒன்பதரை மணிக்கு சென்னை அடையாரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் இயக்குனர் கே சுப்பிரமணியம் அரங்கத்தில் நமது இரண்டாம் ஆண்டு விழா கோலாகலமாக துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக குத்து விளக்கை திரு காத்தாடி ராமமூர்த்தி அவர்களும் நமது உறுப்பினர்கள் முகமது சுலைமான் சுமதி உஷா தேவி மற்றும் கணேசன் ஏற்றி வைத்தார்கள். தமிழ்த்தாயின் வாழ்த்தினை திருமதி விஜயலட்சுமி பாலாஜி அவர்களும் திருமதி துர்கா சாய்ராம் அவர்களும் இணைந்து பாட அரங்கமும் அவருடன் சேர்ந்து தமிழ்ப் பண்ணை இசைத்தது.
பல் சுவை நிகழ்ச்சிகளின் துவக்கமாக முதலாவதாக நமது மகாகவி பாரதி தமிழ் சங்க பாடல் இசைக்கப்பட்டது. திருமதி.சங்கீதா அவர்கள் எழுதி திரு.சாய்ராம் அவர்கள் இசையமைத்த நமது சங்கப் பாடலைப் திருமதி விஜயலட்சுமி அவர்களும் செல்வி இனியா அவர்களும் பாடினார்கள்.
நமது பல்சுவை நிகழ்ச்சிகளின் நல்ல துவக்கமாக அது அமைந்தது பிறகு மெல்லிசை பாடல்கள், கவியரங்கம், குறு நாடகம், நடனம், பட்டிமன்றம் என ஆண்டு விழா களை கட்டியது.
*மேடையில் இன்னிசைத்த குயில்கள்:*
டாக்டர் செல்வன், இனியா,
துரைராஜ்,
பானுமதி,
பவானி,
வாசலக்ஷ்மி,
ஐ பி ஸ்ரீனிவாசன், சுஜாதா
ஆகியோர் இவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.
பாடல்களுக்கு பயிற்சி அளித்து வழிகாட்டிய திரு சாய்ராம் அவர்களுக்கு நன்றி.
கவியரங்கம் பாரதி தந்த வைர வரிகளை தலைப்புகளாக கொண்டு சிறப்பாக நடந்தது:
*1) மனதிலுறுதி வேண்டும்* : சங்கீதா
*2) வாக்கினி லேயினிமை வேண்டும்;* : மோகன்
*3) நினைவு நல்லது வேண்டும்,* : அமுதவல்லி
*4) நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;* : கணேசன்
*5) கண் திறந்திட வேண்டும்,* : மலர்விழி
*6) மண் பயனுற வேண்டும்,* : ராஜேஸ்வரி
இந்த ஆறு கவிஞர்களும் தமிழ் சங்கத்தின் ஆறு ரத்தினங்களாக மேடையில் ஒளிர்ந்தார்கள் என்பதில் தமிழ்ச்சங்கம் பெருமை கொள்கிறது.
தமிழ்ச்சங்க மேடை என்றால் பட்டிமன்றம் இல்லாமலா இதுவரை நமது மேடையில் நடந்த பட்டிமன்றங்கள் அனைவரின் ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றது அதைப்போலவே இந்த விழாவின் பட்டிமன்றமும் மிக அருமையாக நடந்ததோடு அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது:
*திரைப்படப் பாடல்களில் தத்துவ முத்துக்களை அள்ளித் தெளித்தது கண்ணதாசனா?வாலியா? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தின் நடுவர் திரு சி ஹரிஷ்.
பட்டிமன்ற பங்கேற்பாளர்கள்:
கண்ணதாசன் அணி:
1.பிச்சை மணி
2.மல்லிகா மணி
3.சுல்தானா
வாலி அணி:
1.நாகராஜ்
2.தேவி
3.ஶ்ரீவித்யா
பட்டிமன்றத்தின் பொறுப்பாளராக தலைவர் ஸ்ரீவி அவர்கள் இருந்தார்கள் அவருக்கு உதவியாக மகாலட்சுமி செயல்
பட்டார்கள்.
சிறார்கள் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்த இரண்டு குறு நாடகங்கள் மிகச் சிறப்பாக அரங்கேறின சுட்டதா சுடாததா என்கின்ற தலைப்பிலும் தோசைக்கு ஜீனி கிடையாது நாடகத்திலும் சிறார்கள் நடிப்பும் காவலராக வந்த திருமதி பத்மா அவர்களின் மிரட்டும் குரலும் அரங்கத்தை கட்டிப் போட்டது. நடிகர்கள்:
திருமதி.பத்மா
செல்வன்.முகமது அர்மான்,
செல்வன். அகரன்,
செல்வன். மகிழ் மித்ரன்,
செல்வன். ரக்ஷித்,
செல்வன். ஆதவன்.
இவர்களின் நடிப்பு அரங்கத்தை சிரிப்பு மழையில் நனைத்ததோடு ஆரவாரமான கைத்தட்டலையும் பெற்றது.
கல்யாணிக்கு கல்யாணம் என்கிற தலைப்பில் இரண்டு நிமிடம் மள மளவென பேசி எஸ் பி எம் அய்யாவின் பைத்தியக்கார டாக்டர் வசன பாணியை மீண்டும் அரங்கேற்றிய செல்வன். கௌசலேஸ், அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றான்.
இவர்களுக்கு முழு அர்ப்பணிப்போடு அயராது உழைத்து பயிற்சி கொடுத்த நிதி செயலர் திரு சாய்ராம் அய்யா அவர்களுக்கு தமிழ் சங்கத்தின் நன்றிகள்.
எட்டு வயது சிறுமியிலிருந்து 60 வயதைக் கடந்த இல்லத்தரசி வரையில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என அரங்கத்தையே ஆரவார மகிழ்ச்சி கூச்சலில் மூழ்கடித்து தங்களது நடனத்தால் அனைவரின் மனங்களையும் வென்றனர் நமது நடன மணிகள்:
திருமதி.பிரபு குமாரி,
திருமதி.துர்கா சாய்ராம்,
திருமதி.ரமா கிருஷ்ணன்,
திருமதி.விமலா தேவி, திருமதி.மல்லிகா
திருமதி.சிந்து,
திருமதி.மஞ்சுளா,
திருமதி.ஜெயந்தி ராஜன்,
திருமதி. விஜயகுமாரி
செல்வி.சம்யுக்தா,
செல்வி.அர்பா,
செல்வி.மோனிஷா,
செல்வி.ரோஷனா,
செல்வி.ஆயிஷா,
செல்வி.ஆராதனா,
செல்வி.நிவர்சனா,
செல்வி.சாதனா ஸ்ரீ,
செல்வி.ஆதிரா.
இவர்களை பம்பரமாக சுழல விட்டு ஆடுவதற்கு பயிற்சி கொடுத்த நம் பூர்வாகுடி வாசி இளவல் உமேஷ் அவர்களையும் இதற்கு முழு முயற்சி எடுத்து பயிற்சி கொடுத்த திருமதி பிரபுகுமாரி அவர்களையும் தமிழ்ச்சங்கம் நன்றி பாராட்டி மகிழ்கிறது.
இரண்டாம் ஆண்டு விழா மாபெரும் வெற்றியை ஈட்டியது என்று சொன்னால் அந்த வெற்றிக்கு அணி சேர்த்தது போல நான்கு சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகள் நம்மை வாழ்த்தும் விதமாகவும் நமது இளைய தலைமுறைக்கு அறிவுரை கூறும் நிறமாகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன் ஐயா நமது சங்கத்தின் உடைய செயல்பாடுகளை வாழ்த்தியதோடு ழகரக் கவியரங்கத்தை குறிப்பிட்டுச் சொன்னதும், நமது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டியதும் நமக்கு உற்சாகம் தந்தது. அதோடு இல்லாமல் அவருடைய திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதன் மூலமாக வாழ்வில் வெற்றி பெற
*ஈடுபாடு* *தன்னம்பிக்கை* *ஒழுக்கம்*
*உழைப்பு*
இந்த நான்கு விஷயங்களும் அடிப்படை என்று கூறினார். நமது பார்வையாளர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த அறிவுரை மூலம் நல்ல வழி காட்டினார். அவருக்கு நம் நன்றி.
திரு எஸ் பி எம் ஐயா தனது திருக் கரங்களால் *ஸ்ரீவி எழுதிய பாரதியின் வைர வரி கதைகள்* என்ற நூலையும் *திரு கணேசன் எழுதிய ஊர்க் குருவி* என்ற நூலையும் வெளியிட்டார். இது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அதோடு கடந்த இரண்டு வருடங்களின் சிறந்த பங்கேற்பாளர்களுக்கான *பாரதி விருதையும்* அவர் வழங்கினார்.
நகைச்சுவை சரவெடிகளால் நாடக மேடை உலகை அதிரசெய்த திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களுடைய வாழ்த்துரையில், தமிழ்ச் சங்கத்தை பாராட்டி வாழ்த்தியதோடு நகைச்சுவை அலைகளால் அனைவரையும் மகிழ்வித்ததோடு தனது முத்திரையை பதித்தது மிகச் சிறப்பாக இருந்தது. அவருக்கும் நம் நன்றி. *ஶ்ரீவி அவர்கள் எழுதிய கோடையிடக் காமுவும் தொடை நடுங்கி சோமுவும்* என்கின்ற நகைச்சுவை நூலை நகைச்சுவை மன்னர் திரு காத்தடி ராமமூர்த்தி வெளியிட்டது ஒரு சிறப்பம்சம். அந்த நூலை சாம்பசிவம் பெற்றுக் கொண்டார்கள்.
இவரும் 11 நபர்களுக்கு பாரதி விருது வழங்கினார்.
பிறகு, மெல்லிசை மேடையில் ஒரு வலம் வந்த திரு அபஸ்வரம் ராம்ஜி அவர்கள் சங்கத்தின் நூலான *ழகரக் கவியரங்க* நூலையும் *திருமதி என் அமுதவல்லி அவர்கள் எழுதிய என்னை நான் அறியேன்* என்ற நூலையும் வெளியிட்டார். பிறகு 13 நபர்களுக்கு *பாரதியார் விருது* வழங்கினார். அவரது உரையில், காத்தாடி ராமமூர்த்தி அவர்களுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது போல நகைச்சுவைத் தோரணங்களால் அரங்கத்தில் கலகலப்பை ஏற்படுத்தினார். நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்துடன் அவருக்கு இருக்கும் உறவினை சுட்டிக்காட்டி நமது சங்கத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியதோடு மேலும் மேலும் நமது சங்கம் வளர்ந்திட நல்லாசிகளும் கூறினார்.
நமது நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய நிரலான *வலையொளி துவக்கத்தை* ஸ்ரீவித்யா அவர்களின் ஆசிரியை *திருமதி தீபிகா அருண்* துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அவரது உரையிலே தமிழ் மொழி சற்றே தனது மகத்துவத்தை இழந்து வருகிற இந்தக் காலத்திலே குழந்தைகள் மத்தியிலே தமிழை பிரபலப் படுத்துவதற்காக தான் எடுத்த முயற்சியான வலையொலி துவக்கத்தை குறிப்பிட்டு நமது சங்கத்தின் செயல்பாட்டினால் மிகவும் கவரப் பட்டதாக கூறி நமது மகாகவி பாரதி சங்கத்தை வாழ்த்தி பேசினார்.
இரண்டாம் ஆண்டு விழாவின் தொகுப்பாளினி மகாலட்சுமி அவர்களுக்கும்,
நமது அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொளி எடுத்து youtube சேனலில் பதிவேற்றுகின்ற திரு. விஜய் கணேஷ் அவர்களுக்கும்,
நடனப் பயிற்சியாளராக இருந்து மிகச் சிறப்பானதொரு நிகழ்ச்சியை அரங்கேற்றிய திரு உமேஷ் அவர்களுக்கும்
நம் சங்கத்தின் அன்பளிப்பான நூல்களை அவர் வழங்கினார்.
நிறைவாக ஒரு மிகச்சிறந்த நன்றி உரையை திரு வெ. நாகராஜன் அவர்கள் ஆற்றிய பின்பு தேசியப் பண் இசைக்கப் பட்டு விழா இனிதே முடிந்தது.
*நன்றி நவிலல்:* ~கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த ஐந்து நிகழ்ச்சிகளுக்காகவும் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும்,
~ மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சிகளை மேற்கொண்ட பங்கேற்பாளர்களுக்கும்,
~ இந்த நிகழ்ச்சி சிறப்புற நடத்திட உழைத்திட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், ~ தன்னார் வலர்களுக்கும்,
~ இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி விழாவாக மாற்றிய நமது தமிழ் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றியை மகாகவி பாரதி தமிழ் சங்கம் தெரிவிக்கிறது.
*குறிப்பு: நிகழ்ச்சியில் நிறைவுப் பகுதியில் தலைவர் ஶ்ரீவி அவர்கள் குறிப்பிட்டதைப் போல, காலத்தின் அருமை கருதி இன்றைய நிகழ்வுகளில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு நூல்கள் வழங்கிட இயலாமல் போனது. ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நமது நிகழ்ச்சியில் அவர்களுக்கு அந்த நூல்கள் வழங்கப்படும்.*
No comments:
Post a Comment