அன்பே! இருக்கையே!
நீ இருக்கையில்
எனக்கு வேண்டாம்
வேறொரு இருக்கை!
நேசமுடன்..
- சாய்கழல் சங்கீதா
*********************
இந்த இருக்கையில் அமரத்தானே செருக்கையையும், தற்காலிகமாக ,
விட்டு விட்டுகூழைக் கும்பிடுகள்!
இருக்கை. - தொலைக்காட்சி கட்டுப்படுத்திகளின் மறைவிடம்!
ஓய்வு பெற்ற முதியவர்களின் உறைவிடம்.
இருக்கை
-----
பெரும்பாலும், நான்கு கால்கள், இரண்டை கைகள், ஒரு முதுகு கொண்டது.மூளை கிடையாது, ஆனால் மனித மூளையை ஆட்டிப் படைக்கும், பதவியைப் பொறுத்து!
ஆன்மீகத்தலைவர் அமர்வது- பீடம்
அரசை ஆள்பவர்- அமைச்சர்
வரிசை இருக்கைகளில், நீதிபதிகளோ, மாணவர்களோ அமர்ந்தால்- பெஞ்சு( அமர்வு)
இது ஆகுபெயராக,
ஆங்கிலத்தில்,
நிர்வாகக்குழுவின்
தலைவர், பல்கலைக்கழகத்
துறைத்தலைவர் என்றெல்லாம் குறிக்கும்.
இது சாதுவாக இழுத்த இழுப்புக்கு வருவதால்
சாதாரணமாக எடை போடக்கூடாது; அமர்ந்தால் ஆளையே மாற்றிவிடும்!
ஒரு நாற்காலியை வைத்து என்ன அற்புதமான கதை புனைந்தார் திரு கோமல் ஸ்வாமிநாதன்
அவர்கள், நவாப் நாற்காலி என்ற பெயரில்!
பெயர்தான்இருக்கை. ஆனால் அமர்ந்தவரை,சும்மா இருக்க விடாது!
- இ.ச.மோகன்
*****************
"இரு கை" நீட்டி லஞ்சம் வாங்கவே இருக்கைக்கு அனைவருக்கும் ஆசை....
😊சாயி😊
*****************
No comments:
Post a Comment