சுற்றுச்சூழல் பாதுகாப்போம்
◆●◆●◆●◆●◆●◆●
மரம் வெட்டும் மர
மண்டைகளுக்கு
சமர்ப்பணம்
◆●◆●◆●◆●◆●◆●
ஓங்கி உயர்ந்து செழித்து வளர்ந்து
நிலமெங்கும் குளிர் நிழல் பரப்பி
மானுடம் பயன்பெற காய்கனி தந்து
தாயைப் போல் வாழும் மரத்தினை
கூர்வாளால் வெட்டித் தள்ளிட
முனைப்போடு வருகிறான் மனிதன்
அதுவெறும் மரமல்ல என
அறிவானோ
ஆக்ஸிஜன் உருவாக்கும் ஆலையென்று.
மரம் வெட்டும் மர மண்டைக்கு
செக்கு எது சிவலிங்கம் எதுவெனத்
தெரியாததால் அழிவு
பூவுலகுக்கே!
மரங்களைப் பாதுகாப்போம்! சுற்றுச்சூழலை பேணுவோம்!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
*******
உலக சுற்றுச்சூழல் நாளில்...
சுழலும் புவி இதில் சூட்சுமங்கள் பலவாம்
சுற்றுச்சூழல் நாளில் (5, ஜூன்) சொல்வேன் சிலவாம்
அழலென, புனலென,... பூதங்கள் ஐந்து
அளவான அவை, இங்கழகான வாழ்வு
கழன்ற மரை மண்டையன் மனிதன் மறந்தான்
காசு, காசு என்று சமநிலைச் சிதைக்கிறான்
குழம்பிய பூதங்கள் கை விரிக்கும் போது
குள்ளநரி சொல்வான் "இயற்கை சீறுது"
__. குத்தனூர் சேஷுதாஸ் 5/6/2025
****************
[06/06, 6:44 am] Sangeetha: மரங்கள் புத்திசாலிகள்...
மரம் சுவாசிக்க
மனிதன் உதவுகிறான்
மனிதன் சுவாசிக்க
மரம் உதவுகிறது
கணக்கு சரியாகிவிட்டது..
ஆனால்..
தன் உயிர்க் காற்றின்
உற்பத்தி மையங்களை
மனிதன் பாதுகாக்காமல் முட்டாளாகிறான்...
பற்பல விதங்களில் மனிதனுக்கு உதவி
தன் உயிர்காற்றின் மையங்களைப் பாதுகாக்கும் மரங்கள்
புத்திசாலிகளே!
மரங்கள் மட்டும் தான் பிராண வாயுவை வெளியிடுகின்றனவா? அல்ல..
இவற்றை விட அதிகமாக கடல் வாழ் மிதவை வாழிகள்/ அலை வாழிகள் ( phyto planktons) எனப்படும் கடல் வாழ் நுண்ணுயிர்கள், பாசி , கடல் வாழ் செடி கொடிகள் போன்றவை வெளியிடுகின்றன.
கடலைப் பாதுகாப்பதும் மிக முக்கியம். நாம் அன்றாடம் நீர்நிலைகளை மாசுப் படுத்துவதோடு அல்லாமல் கப்பலில் கொண்டு செல்லப்படும் எண்ணெய், இரசாயனங்கள் ஆகியவை கடலில் சிந்தி விடுவது (சமீபத்தில் கேரளாவில் இது நடந்தது) இந்த உயிர்வாழிகளுக்குக் கேடு..
இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் அல்லாமல் இவற்றைப் பாதுகாக்க நம் அன்றாட வாழ்வில் என்ன மாற்றங்கள் செய்கிறோம் என்பது கேள்விக்குறி!
-= சங்கீதா
*************
No comments:
Post a Comment