நெடுஞ்சாலைப் பயணம்...
நெடுஞ்சாலைப் பயணம்
வாகனப் புலிகள் நான்கு கால்களில் பாயும் வேகம்..
வேகமெடுத்த கால்களைப்
பிடித்து நிறுத்தும்
சுங்கச் சாவடிகள்..
அரிதாம் மழைத்துளிகளை மாயமாக்கும் வாகனத் துடைப்பான்கள்..
குடைகளை விரித்து வரவேற்கும் உணவகங்கள்..
இரண்டு கால் வாகனங்கள்
பொந்துகளுக்குள் புகுந்து முந்தி மறையும்..
எங்கெங்கோ பிறந்தவர்களை
ஒன்றினைக்கும் பேருந்து..
யாருக்கோ பொருட்களை
சுமந்து செல்லும் ட்ரக்குகள்..
காற்றுடன் நட்பு பாராட்டும்
நயவஞ்சகப் புகை ..
பற்களைக் காட்டி
இளிக்கும் அறிவிப்புப் பலகைகள்..
வாகனங்களின் புறக் கண்ணாடியிலேயே
காட்சி தந்துவிடும் சாமிகள்..
இல்லத்தருகே இல்லா
மரம் செடிககளின் பின்னோக்கிய பயணம்..
தொடர்ந்து வந்து உறவைத்
துண்டித்துக் கொள்ளும் மேகங்கள்...
வேகமான சாலையில் மெல்ல நகரும் ஆடுகளை ஓரமாய் மேய்த்துச் செல்லும்
கொடுத்து வைத்த தாத்தா..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment