நீரூற்று ரசிக்க ஆசை என்றேன்- நீர்க்குமிழி ரசிக்கப் பழகு என்கிறாய்!
சூரிய ஒளி சிறந்தது என்றேன்- மின்மினி ஒளி பற்றி பேசுகிறாய்! கண்டு மகிழ நிழற்படம் வேண்டுமென்றேன் -
நிஜத்தை விழியில்
பதிவுசெய் என்கிறாய்!
நினைவுகளை கல்வெட்டில் பொறிக்க முயல்கிறேன் -
முதலில் கண்ணாடியில் எழுது என்கிறாய்!
யுகம் வாழ வழிதேடி ஓடுகிறேன் -
நொடி மகிழ்ந்து நடந்து செல்லென்கிறாய்!
நிலையான உன்னன்பின் பொருள் உணர்ந்தேன்..
நிலையில்லா உலகைப்
புரிந்து வாழ்வேன்..
--------------------------------
மேகங்கள் வடிவம் பெறலாம்..
வடிவான முகங்கள்,
மேகமாய் புதிராக நகரலாம்..
கயிறும் பாம்பு ஆகலாம்..
நித்தம் மிதிபடும்,
மண்ணும் பொன் ஆகலாம்..
நிழல்கள் நிஜமாய் மலரலாம்..
அடித்தளமாய் இருந்த,
நிஜங்களின் நிழல்கள் சுட்டெரிக்கலாம்..
தொடர்புகள் உறவாக ஒலிக்கலாம்..
உடன்தொடர்ந்த உறவுகள்,
தொலைதூரத் தொடர்பாக மாறலாம்.. ..
தூரமறியா வாழ்க்கைப் பயணத்தில்,
வேகம் குறைந்து..
பாதை கூட மாறலாம் ...
கற்பனைகள்..கனவுகள் , யூகங்களென,
மனம் பன்மொழியில் பேசலாம் ..
ஆனால், காலம் செய்யுமிதன் மொழிபெயர்ப்போ, யதார்த்தம் ...
---------------------
No comments:
Post a Comment