மருதம் - குத்தனூர் சேஷுதாஸ்
வயலும்,
அது சார்ந்த ஊரதுவும் மருதம்
வள்ளல்கள் (உழவர்) இங்கதிகம், வாழ்கிறது பாரதம்
அயிராவதம்
ஏறும் இந்திரன் இறைவன்
ஆலமர நிழலாக அங்கங்கே சொர்க்கம்
பயிர்கள்
இளமையில் பச்சை சேலை அணியும்
பருக்க
நெல் மணிகள் மணமகளாய் குனியும்
முயலாய்
இளங்கன்று துள்ளி எங்கும் ஓடும்
முட்டி முட்டி பால் குடிக்க தாய்ப் பசு மகிழும்
கயல்கள்
துள்ளும் வயலிலும், வாய்க்காலிலும்,
கண்டாங்கிச் சேலை கன்னியர் முகத்திலும்
வியர்வை வழிய வழிய கண் முனே மாமன்
வேல்விழி கண்ணில் அவன் " காலா ஜாமுன் "
வயிறார உண்ண இன்று அவனுக்கு உணவில்லை
வாங்கிய கடனுக்கு தூக்கில் தொங்கும் நிலை
உயர் கொள்முதல் விலை என்று கிடைத்திடுமோ!
உழவு முடங்குவதை அரசு தடுத்திடுமோ?
-----------------------------------------------
மருதம் - ஸ்ரீவித்யா வெங்கடேஸ்வரன்
மருதம் என்றொரு நிலமிருந்ததாம் அதை
மதம் பிடித்த யானை போல் மனிதன் மிதித்து அங்கே மாடங்கள் மாளிகைகள்
மற்றும் பல ஆலைகள் அமைத்தானாம்
மாற்றம் முன்னேற்றம் என்றெல்லாம் அங்கலாய்த்து மரபதனை மறந்தே போய்
மணிமணியாய் நெல்லதனை பயிரிடாமலே பாழாய்ப்போய்
உணர்வுகளை இழந்த பாவியாக
உழவனை போற்றாமல்
உழுதுண்டும் வாழாமல்
தொழுதுண்டே மடிவானாம்
--------------------------------------------------------
No comments:
Post a Comment